புதுச்சேரி : ரவுடிகளின் அச்சமின்றி வியாபாரம் செய்ய தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் கூறினார்.
உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் கூட்டணி கட்சியினருடன் நேற்று பொன் நகர், ஜவகர் நகர், விக்டோரியா நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், முன்னாள் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டங்கள் அனைத்தும் ரங்கசாமி முதல்வராக வந்தவுடனே நிறைவேற்றப்படும்.ஏழை பெண்களுக்கு நிரந்தர வருவாய்க்கான வட்டியில்லா தொழிற்கடன் பெற்றுத் தரப்படும்.
விடுபட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரப்படும். பிரதமரின் கல் வீடு கட்டும் திட்டத்தில் உழவர்கரை தொகுதி பயனாளிகளுக்கு நிதி பெற்றுத்தரப்படும்.தொகுதியில் அரசு பள்ளிகள் அனைத்தும் நவீன வசதிகளுடன் கூடிய கணினி வகுப்புக்கள் கொண்டு வரப்பட்டு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும். கொரோனா காலத்தில் வருவாயின்றி பாதித்தவர்களுக்கு இலவச கடன் திட்டங்கள் மூலம் நிதியுதவி பெற்றுத் தரப்படும். வியாபாரிகள் ரவுடிகள் பிரச்னையின்றி வியாபாரம் செய்ய, தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE