பொது செய்தி

தமிழ்நாடு

'சி---விஜில்' புகார் மீது 90 நிமிடத்தில் நடவடிக்கை

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
ஊட்டி:'சி-விஜில்' லில்அனுப்பப்படும் புகார்கள் மீது, 90 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்தல் நடத்தை விதி மீறல்கள் மற்றும், முறைகேடுகள் தொடர்பான புகார்களைபொதுமக்கள் தெரிவிக்க தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்ட 'சி--விஜில்' குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓட்டம் ஊட்டியில் நடந்தது.மாவட்ட விளையாட்டு ஆணையம்
 'சி---விஜில்' புகார் மீது 90 நிமிடத்தில் நடவடிக்கை

ஊட்டி:'சி-விஜில்' லில்அனுப்பப்படும் புகார்கள் மீது, 90 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்தல் நடத்தை விதி மீறல்கள் மற்றும், முறைகேடுகள் தொடர்பான புகார்களைபொதுமக்கள் தெரிவிக்க தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்ட 'சி--விஜில்' குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓட்டம் ஊட்டியில் நடந்தது.மாவட்ட விளையாட்டு ஆணையம் ஏற்பாடு செய்த இந்த ஓட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து, இது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார்.பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில்,''சி-விஜில் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் அனுப்பப்படும் புகார்கள் மீது, 90 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதி மீறல்கள், புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக அடுத்த, 48 மணி நேரத்தில் தேர்தல் பறக்கும் படை, தேர்தல் நிலைக்குழுவின் கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகள் தீவிரப்படுத்தியுள்ளனர்,'' என்றார்.எஸ்.பி. பாண்டியராஜன், ஊட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மோனிகாராணா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X