பஸ் மீது வாகனம் மோதல்: போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

பஸ் மீது வாகனம் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

Added : ஏப் 03, 2021
Share
கூடலுார்:கூடலுார், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, அரசு பஸ்சும் அதன் பின்னால் இருசக்கர வாகனமும், புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தன. அரசு மருந்தகம் அருகே, ஊட்டியில் சுற்றுலா பயணிகளுடன் வந்த சுற்றுலா வாகனம், அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றவர், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து
 பஸ் மீது வாகனம் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

கூடலுார்:கூடலுார், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, அரசு பஸ்சும் அதன் பின்னால் இருசக்கர வாகனமும், புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தன. அரசு மருந்தகம் அருகே, ஊட்டியில் சுற்றுலா பயணிகளுடன் வந்த சுற்றுலா வாகனம், அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றவர், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து காரணமாக, ஊட்டி சாலையில் முனீஸ்வரர் கோவில் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போலீசார் வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X