ஏம்பலம் (தனி) தொகுதி இது வரை 13 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில், காங்., 7 முறை, அ.தி.மு.க., ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா இரண்டு முறை, தி.மு.க., என்.ஆர். காங்., ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் அதிகமாக வசிக்கும் இத்தொகுதியில் முருகேசன், ராஜாராமன் ஆகியோர் இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். அங்காளம்மாள், வீரம்மாள், சிவலோகநாதன், அன்பழகன், தெய்வநாயகம், பக்கிரியம்மாள், கங்காதரன், ராஜவேலு, கந்தசாமி தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
காங்., வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான கந்தசாமி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தோல்வியடைந்த லட்சுமிகாந்தன் என்.ஆர். காங்., வேட்பாளராக மீண்டும் களம் இறங்கி உள்ளார்.இவர்களை தவிர, ஸ்ரீபன் (தே.மு.தி.க.,), வைத்திலிங்கம் (இந்திய ஜனநாயக கட்சி), சோமநாதன் (மக்கள் நீதி மய்யம்), சுதா(நாம் தமிழர் கட்சி), அரவிந்தன்(பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், முருகையன் என்ற சுயேட்சை வேட்பாளரும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் 7 பேர், சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் போட்டியிடும் இத்தொகுதியில் காங்., - என்.ஆர். காங்., இடையே பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.ஏம்பலம் தொகுதிக்கு தான் செய்துள்ள பணிகளை பட்டியலிட்டு காங்., வேட்பாளர் கந்தசாமி ஓட்டு சேகரித்து வருகிறார். கிருமாம்பாக்கம் ஏரியில் நடந்து வரும் சுற்றுலா பணிகள், கிருமாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் ஏ.சி., திருமண நிலையம் போன்ற திட்டங்களை தனது சாதனையாக பிரசாரம் செய்கிறார். தொகுதியில் அனைத்து தரப்பு மக்களுடனும் சகஜமாக பழகுவது இவரது பலம்.கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரவில்லை, அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குறை தொகுதி முழுவதும் பரவலாக உள்ளது. வேலை வழங்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். ஆனால், கவர்னராக இருந்த கிரண்பேடி தடுத்து விட்டார் என்று மக்களிடம் கந்தசாமி விளக்கம் அளித்து வருகிறார்.என்.ஆர். காங்., வேட்பாளர் லட்சுமிகாந்தனின் தந்தை உத்திரவேலு, புதுச்சேரி சட்டசபை எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தவர். அவருக்கு தொகுதி மக்களிடையே இன்றும் செல்வாக்கு உள்ளதும், கடந்த தேர்தலில் தோற்றதால் ஏற்பட்ட அனுதாபமும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் ஓட்டு வங்கியும் லட்சுமிகாந்தனுக்கு பலம்.லட்சுமிகாந்தனின் சித்தப்பா ராஜவேலு நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதால், ஏம்பலம் தொகுதியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அங்கு சென்றதால் தேர்தல் பணிகளுக்கு தனது ஆதரவாளர்களை பயன்படுத்தி சமாளித்து வருகிறார்.ஏம்பலம் தொகுதியை பொருத்தவரை, காங்., - என்.ஆர். காங்., வேட்பாளர்களுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.2016 சட்டசபை தேர்தல்கந்தசாமி(காங்.,)--18,945லட்சுமிகாந்தன்(என்.ஆர். காங்.,)--7,745வித்தியாசம்--11,200ஏம்பலம் தொகுதி வாக்காளர்கள்மொத்த வாக்காளர்கள்--34,603ஆண்கள்--16,021பெண்கள்--18,580மூன்றாம் பாலினம்--2
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE