அரசியல் செய்தி

தமிழ்நாடு

வால்பாறை வேட்பாளர்கள்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
ஆனைமலை:கோவை மாவட்டம், வால்பாறை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் அமுல் கந்தசாமி, தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., வேட்பாளர் ஆறுமுகம் போட்டியிடுகின்றனர். இரண்டு வேட்பாளர்களும், பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்திலுள்ள, தனியார் விடுதியில், தங்கியுள்ளனர்.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு துணை பி.டி.ஓ., ஆனந்த் தலைமையிலான பறக்கும் படையினர், வேட்பாளர்களின் அறைகள் மற்றும் கட்சி

ஆனைமலை:கோவை மாவட்டம், வால்பாறை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் அமுல் கந்தசாமி, தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., வேட்பாளர் ஆறுமுகம் போட்டியிடுகின்றனர். இரண்டு வேட்பாளர்களும், பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்திலுள்ள, தனியார் விடுதியில், தங்கியுள்ளனர்.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு துணை பி.டி.ஓ., ஆனந்த் தலைமையிலான பறக்கும் படையினர், வேட்பாளர்களின் அறைகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்கியிருந்த அறைகளில் சோதனை செய்தனர். இரண்டு மணி நேரம் நடந்த சோதனையில், எந்த பரிசுப்பொருளும், பணமும் கிடைக்காததால், அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பிச்சென்றனர்.இந்திய கம்யூ., வேட்பாளர் ஆறுமுகம் கூறுகையில், ''வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தார்கள். என்னிடம் பணம், பொருள் ஏதுமில்லையே, தொண்டர்களை நம்பிதான் களத்தில் நிற்கிறேன் எனக்கூறி, கதவை திறந்து விட்டேன். சோதனை செய்தார்கள், பணம், பொருள் ஏதும் இல்லை எனத்தெரிந்ததும் வெளியில் சென்றார்கள்.'' என்றார்.அ.தி.மு.க., வேட்பாளர் அமுல்கந்தசாமி கூறுகையில், ''இரவு, 12:00 மணிக்கு மேல் தான் அறைக்கு வந்து உறங்கினேன். நள்ளிரவில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், எனது அறையில் சோதனை செய்யவில்லை. அருகிலுள்ள எங்கள் கட்சி நிர்வாகிகள் அறைகள், கார்களில், 'சல்லடை' போட்டு சோதனை செய்தனர். எந்தப்பணமும், பொருளும் இல்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X