கோவை:கோவை தெற்கு தொகுதி, காங்., வேட்பாளர்மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து, காங்., மாநில தலைவர் அழகிரி பேசியதாவது:கோவையில் எதிரணியினர் துவண்டுவிட்டதால், வன்முறையை கையில் எடுத்துள்ளனர். யோகி ஆதித்யநாத் வந்தபோது நடந்த வன்முறை அதற்கு உதாரணம். பெண்களுக்கு மரியாதை தருவதைப் பற்றி பா.ஜ., பேசுகிறது. 1925ல், ஒன்றுபட்ட இந்தியாவில், காங்., அகில இந்தியத் தலைவராக சரோஜினி நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா, பிரதமராகவும் கட்சித் தலைவராகவும் இருந்தார். பிரதீபா பாட்டில் குடியரசுத் தலைவராக இருந்தார். ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபைஆகியவற்றில் பெண்கள் தலைமை வகித்தனரா?இவ்வாறு, அழகிரி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE