ரூ.2000 : மதுரையில் ஒரு ஓட்டுக்கு * அ.தி.மு.க., - தி.மு.க., தாராளம்| Dinamalar

தமிழ்நாடு

ரூ.2000 : மதுரையில் ஒரு ஓட்டுக்கு * அ.தி.மு.க., - தி.மு.க., தாராளம்

Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (3)
Share
மதுரை: தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மதுரையில் அ.தி.மு.க., - தி.மு.க., போட்டி போட்டு வாக்காளர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை பட்டுவாடா செய்வதாக புகார் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் பிரசாரம் நாளை(ஏப்.,4) இரவு 7:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இருக்க
ரூ.2000 : மதுரையில் ஒரு ஓட்டுக்கு * அ.தி.மு.க., - தி.மு.க., தாராளம்

மதுரை: தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மதுரையில் அ.தி.மு.க., - தி.மு.க., போட்டி போட்டு வாக்காளர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை பட்டுவாடா செய்வதாக புகார் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் நாளை(ஏப்.,4) இரவு 7:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி சில இடங்களில் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க., வினர் ஓட்டுக்கு ரூ.2,000, தி.மு.க., வினர் ரூ.1,000 கொடுப்பதாக ம.நீ.ம., வேட்பாளர் முனியசாமி மேற்கு தேர்தல் பார்வையாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ராவிடம் புகார் மனு அளித்தார்.

அவர் கூறுகையில், ''ஜெய்ஹிந்த்புரம், முத்துப்பட்டி, சொக்கலிங்கநகர் பகுதியில் இரு கட்சியினரும் வெளிப்படையாக பணம் பட்டுவாடா செய்கின்றனர். பிரசாரத்தின் போது வேண்டுமென்றே மின்சாரத்தை துண்டித்து இடையூறு செய்கின்றனர். ஆதாரத்துடன் புகார் மனு அளித்து உள்ளேன்'' என்றார்.இதேபோல் மதுரை தெற்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், சோழவந்தான் தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் விசாரித்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X