இந்தியா

அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தல்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என நிர்வாக சீர்த்திருத்த துறை அறிவுறுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகின்றது. இருப்பினும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயக்கம்

புதுச்சேரி : 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என நிர்வாக சீர்த்திருத்த துறை அறிவுறுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகின்றது.

இருப்பினும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயக்கம் காணப்படுகின்றது. மாநிலத்தில் 6 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் 74 ஆயிரத்து 320 பேர் வரை தான் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.கடந்த 28 நாட்களில் பொதுமக்களில் 33183 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1616 பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அதேவேளை முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணி துவங்கி கடந்த 56 நாட்களில் 27,461 பேர் தான் போட்டுள்ளனர்.

எனவே முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட நிர்வாக சீர்திருத்த துறை நடவடிக்கையில் இறங்கி உள்ளது.இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், அரசு பொதுத் துறை நிறுவனங்கள்,சொசைட்டி,தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள்,அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும்முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X