பழைய சோறும், கம்மங்கூழும்...!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழைய சோறும், கம்மங்கூழும்...!

Added : ஏப் 03, 2021
Share
பிரதான கட்சிகள் உட்பட மற்ற வேட்பாளர்கள் எப்படியோ... ஆனால், 'நாம் தமிழர்' கட்சி வேட்பாளர்களின் உணவு 'மெனு' கூட வித்தியாசமாய் இருக்கிறது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வேட்பாளர் ரஞ்சிதா மற்றும் பிரசாரத்துக்கு அவருடன் செல்லும் கட்சி நிர்வாகிகள் காலை மற்றும் மதிய வேளைக்கு டிபன் பாக்ஸ்களில், சாப்பாடோ, இட்லியோ, தோசையோ கொண்டு சென்று சாப்பிடுகின்றனர். கொளுத்தும்

பிரதான கட்சிகள் உட்பட மற்ற வேட்பாளர்கள் எப்படியோ... ஆனால், 'நாம் தமிழர்' கட்சி வேட்பாளர்களின் உணவு 'மெனு' கூட வித்தியாசமாய் இருக்கிறது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வேட்பாளர் ரஞ்சிதா மற்றும் பிரசாரத்துக்கு அவருடன் செல்லும் கட்சி நிர்வாகிகள் காலை மற்றும் மதிய வேளைக்கு டிபன் பாக்ஸ்களில், சாப்பாடோ, இட்லியோ, தோசையோ கொண்டு சென்று சாப்பிடுகின்றனர். கொளுத்தும் வெயிலில், இவர்களது மெனுவில் அதிகமாக இடம்பெறுவது, பழைய சோறுதான். மரங்கள் அடர்ந்த பகுதிகள் இருந்தால், அங்கே அமர்ந்து பசியாறுகின்றனர்.திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ஈஸ்வரன், தன்னுடன் வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 15 முதல், 20 பேருக்கு, அந்த பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு சிறிய ஓட்டலில், காலையில் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என அவர்கள் விரும்பும் உணவை வாங்கி தருகிறார். மதிய வேளைகளில், தக்காளி சாதம், தயிர் சாதம், பரோட்டா, முழு சாப்பாடு என, அவர்கள் விரும்புவதை வாங்கி கொடுக்கிறார். ஓட்டல் பில்லை, கட்சி நிர்வாகிகளில் எவரேனும் ஒருவர் ஏற்றுக்கொள்கிறார். இன்னும் சிலர், அருகில் வீடுகள் இருப்பதால், வீடுகளுக்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர்.வேட்பாளர் ஈஸ்வரன், மளிகை கடை வைத்திருப்பதால், வீட்டிலேயே கம்மங்கூழ் தயார் செய்து, கட்சி தொண்டர்களுக்கு காலை நேரத்தில் பரிமாறுவதும், குளிர்பான வகைகளை எடுத்து வந்து, வினியோகித்தும், பிரசாரத்துக்கு உடன் வரும் தொண்டர்களை குளுமைப்படுத்துகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X