213 பேருக்கு கொரோனா தொற்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

213 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஏப் 03, 2021
Share
புதுச்சேரி, : புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 213 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2596 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 143; காரைக்காலில் 53; ஏனாமில் 13 ; மாகியில் 4 பேர் உட்பட 213 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 41 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ மனைகளில் 334 பேர், வீடுகளில் 1086 பேர் உட்பட 1420 பேர்

புதுச்சேரி, : புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 213 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2596 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 143; காரைக்காலில் 53; ஏனாமில் 13 ; மாகியில் 4 பேர் உட்பட 213 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 41 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ மனைகளில் 334 பேர், வீடுகளில் 1086 பேர் உட்பட 1420 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் புதுச்சேரியில் 42, காரைக்காலில் 34, ஏனாமில் 4, மாகியில் 2 பேர் உட்பட 82 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 39 ஆயிரத்து 837 பேர் சிகிச்சை முடிந்து திரும்பினர்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காரைக்கால் நல்லாத்துார் பகுதி 60 வயது மூதாட்டி இறந்தார். இது வரை 684 பேர் இறந்துள்ளனர்.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 225 சுகாதார பணியாளர்கள், 324 முன்கள பணியாளர்கள், 1616 பொது மக்கள் உட்பட 74 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X