பொது செய்தி

தமிழ்நாடு

பாடிய வாயும்... ஆடிய காலும்!

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
நாளை இரவு, 7:00 மணியுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓயப்போகிறது. நட்சத்திர பேச்சாளர்களை காட்டிலும், 'ஆர்க்கெஸ்ட்ரா' பாடகியருக்குதான் இப்போது மவுசு கூடியிருக்கிறது.திருப்பூரை சேர்ந்த ஆர்க்கெஸ்ட்ரா பாடகி ஒருவர் கூறியதாவது:கச்சேரிகளில், 22 ஆண்டுகளாக பாடி வருகிறேன். நடிக்கவும் செய்வோம். டான்ஸ் கூட ஆடுவோம். ஒரு காலத்தில், 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் தேதி அறிவிப்பாகிவிடும்.

நாளை இரவு, 7:00 மணியுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓயப்போகிறது. நட்சத்திர பேச்சாளர்களை காட்டிலும், 'ஆர்க்கெஸ்ட்ரா' பாடகியருக்குதான் இப்போது மவுசு கூடியிருக்கிறது.திருப்பூரை சேர்ந்த ஆர்க்கெஸ்ட்ரா பாடகி ஒருவர் கூறியதாவது:கச்சேரிகளில், 22 ஆண்டுகளாக பாடி வருகிறேன். நடிக்கவும் செய்வோம். டான்ஸ் கூட ஆடுவோம். ஒரு காலத்தில், 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் தேதி அறிவிப்பாகிவிடும். அப்போதிருந்தே ஒத்திகை பார்த்து வீதி நாடகம் நடத்துவோம்.இசை, நாடகம் வழியாக பல சமூக மாற்றத்தை அரசியல் இயக்கத்தோடு இணைந்து நிகழ்த்தி காட்டியுள்ளோம். இந்த அவசர உலகில் அதற்கு நேரமில்லை. கலைஞர்களின் நிலை நலிவடைந்து கிடக்கிறது. 'மைக் பிடிச்ச கை; சும்மா இருக்குமா?' பிரசாரத்தில் பேச அழைப்பு வந்ததும் ஓ.கே. சொல்லிட்டோம். ஒரு நாளைக்கு, சாப்பாட்டுடன், 1,500 ரூபாய் தர்றாங்க. ஊத்துக்குளி, பெருந்துறை, கரூர்னு பல ஊர்களுக்கும் இங்கிருந்து கலைஞர்கள் சென்றுள்ளனர்.காலை, 7:00 மணிக்கு ஆரம்பித்து, 11:00 மணி வரை, மாலை, 4:00 மணிக்கு ஆரம்பித்து, இரவு, 8:00 மணி வரை பேசணும். கட்சி அறிக்கைகள், நலத்திட்டங்களை சொல்லிட்டே பிரசார வாகனங்களில் ஏறி தெருக்களில் வலம் வரணும். வாழ்வதற்காக, 'மைக்' பிடிச்சோம். பாடினால் என்ன? பேசினால் என்ன? காலத்திற்கேற்ப மாறித்தானே ஆகணும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X