அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முதல்வர் பிரசாரம் செய்யல...' காங்கயம் அ.தி.மு.க., கவலை

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர் மாவட்டம், காங்கயம் தொகுதி, அ.தி.மு.க.,வின் 'கோட்டை'யாக இருந்து வருகிறது; ஜெயலலிதா வென்ற தொகுதி இது. இந்த முறை, சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், முதல்வர் பழனிசாமி, காங்கயத்தில் பிரசாரம் செய்தார். தேர்தல் அறிவிப்புக்கு பின் வரவில்லை. துணை முதல்வர் பன்னீர்செல்வம் திருப்பூர் பிரசாரத்துக்கு வந்தபோது, காங்கயம் அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம் திருப்பூர் வந்து

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தொகுதி, அ.தி.மு.க.,வின் 'கோட்டை'யாக இருந்து வருகிறது; ஜெயலலிதா வென்ற தொகுதி இது. இந்த முறை, சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், முதல்வர் பழனிசாமி, காங்கயத்தில் பிரசாரம் செய்தார். தேர்தல் அறிவிப்புக்கு பின் வரவில்லை. துணை முதல்வர் பன்னீர்செல்வம் திருப்பூர் பிரசாரத்துக்கு வந்தபோது, காங்கயம் அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம் திருப்பூர் வந்து சென்றார். துணை முதல்வரும், காங்கயம் வரவில்லை.அதேசமயம், காங்கயம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன், ஸ்டாலின் பங்கேற்க கூட்டத்துக்கு, ஏராளமானோரை திரட்டி, தி.மு.க., வேட்பாளர் சாமிநாதன் தன் பலத்தை காட்டினார். அதே இடத்தில், முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்வார் என்று அ.தி.மு.க.,வினர் கூறிவந்தனர்.தாராபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்துக்கு, முதல்வர் வந்ததால், காங்கயத்துக்கு அவரால் வர முடியாமல் போனது; முதல்வர் பிரசாரத்துக்கு வராததால், அ.தி.மு.க.,வினர் 'அப்செட்'டாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X