அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர்கள் இல்லாததால் தடுமாறும் வேட்பாளர்கள்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
'தலைவர்கள் இல்லாத தேர்தலை கூட சமாளித்து விடலாங்க. ஆனால், உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தேர்தலை தான் சமாளிக்க முடியலீங்க...' என்று நொந்து போயுள்ளனர் ஆளும்கட்சி வேட்பாளர்கள்.வேட்பாளர் பட்டியல் வெளியானதும், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்களை சந்தித்து, வேட்பாளர் ஆதரவு திரட்டுவார். அப்போதே, 'கணக்கு' பேசி வைத்து கொள்வர்.வேட்பாளர்

'தலைவர்கள் இல்லாத தேர்தலை கூட சமாளித்து விடலாங்க. ஆனால், உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தேர்தலை தான் சமாளிக்க முடியலீங்க...' என்று நொந்து போயுள்ளனர் ஆளும்கட்சி வேட்பாளர்கள்.வேட்பாளர் பட்டியல் வெளியானதும், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்களை சந்தித்து, வேட்பாளர் ஆதரவு திரட்டுவார். அப்போதே, 'கணக்கு' பேசி வைத்து கொள்வர்.வேட்பாளர் கூறுவது போல், பிரசார 'பாயின்ட்'களில், இவ்வளவு பெண்கள், இவ்வளவு ஆண்கள் என, கச்சிதமாக கூட்டம் சேர்த்தி, தங்களது செல்வாக்கை நிரூபணம் செய்வர். கவுன்சிலர் ஏற்பாடு என்பதால், வார்டுக்குள் எவ்வளவு பிரச்னை இருந்தாலும், அதை மறந்துவிட்டு, கவுன்சிலருடன் சென்று பொதுமக்களும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்பது வழக்கம்.நகர பகுதி மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தேர்தல் என்பதாலும், 'கோஷ்டி'கள் அதிகமாகிவிட்டதாலும், பிரசாரத்துக்கு கூட்டம் சேர்ப்பது குதிரை கொம்பாக மாறிவிட்டது. அதனாலேயே, பொன்னாடை, மாலை, பட்டாசு போக, ஆரத்திக்கு, 100 ரூபாய் கொடுத்து கூட்டம் சேர்க்கிறது ஆளும்கட்சி.வேட்பாளர்களும், 'நான் ஜெயிச்சால், நீங்க தான் கவுன்சிலர், அவருதான் மண்டல தலைவர்' என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். 'ஆஹா... எப்படியும் கவுன்சிலர் ஆனாப்போதுமே... படிப்படியா மேல போயிடலாம்' என, நிர்வாகிகள் பகல் கனவு காணுகின்றனர்.ஓட்டுக்கேட்டு செல்லும் போது, ஆளும்கட்சி வேட்பாளரை சுற்றிவளைக்கும் பெண்கள், தங்கள் பகுதியில், குடிநீர் இல்லை... சாக்கடை இல்லை... 'டாய்லெட்' இல்லை... தெருவிளக்கு இல்லை... என, மொய்க்க துவங்க விடுகின்றனர்.அவர்களை சமாதானம் செய்துவிட்டு, அங்கிருந்து செல்வதற்குள் வேட்பாளர்கள் நொந்தே போய் விடுகின்றனர். 'எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, முதல்வேலையா நகர உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தியே ஆகணும்...' என்பதுதான், தற்போதைய வேட்பாளரின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X