வாசகர்கள் வாட்ஸ் அப் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாசகர்கள் வாட்ஸ் அப் புகார்

Added : ஏப் 03, 2021
Share
* தெரு நாய்கள் தொல்லைமதுரை கலை நகர் விரிவாக்கம் பல்லவி நகர் 5வது தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டமாக சுற்றி திரியம் நாய்கள் தெருவில் செல்வோரை கடிக்க வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா. - முருகேசன், பல்லவி நகர்.///* அசுர வேகத்தில் லாரிகள் வாடிப்பட்டி பகுதியில் தண்ணீர் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால்

* தெரு நாய்கள் தொல்லைமதுரை கலை நகர் விரிவாக்கம் பல்லவி நகர் 5வது தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டமாக சுற்றி திரியம் நாய்கள் தெருவில் செல்வோரை கடிக்க வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா. - முருகேசன், பல்லவி நகர்.///* அசுர வேகத்தில் லாரிகள் வாடிப்பட்டி பகுதியில் தண்ணீர் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து பயத்தில் மக்கள் நடமாட வேண்டியுள்ளது. இது போன்ற லாரிகளை அனுபவம் இல்லாத இளம் வயதினர் தான் ஓட்டுகிறார்கள். போக்குவரத்து துறையினர் கவனிப்பார்களா. - பெருமாள்சாமி, வாடிப்பட்டி. ///* நோய் பரவும் அபாயம் மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் கிருஷ்ணா தெருவில் கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல முறை இது குறித்து சுட்டிகாட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை. - தீபிகா, கிருஷ்ணா தெரு. * மகாத்மா காந்தி நகர் வைகை நதி தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இங்கு கொசுக்கள் பெருகி வருவதால் டெங்கு பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. - சுப்பிரமணியன், மகாத்மா காந்தி நகர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X