சுயே., வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் சூறை

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காங்., கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் சூறையாடப்பட்டதால் ஏனாமில் பதற்றம் நிலவுகிறது. ஏனாம் சட்டசபை தேர்தலில் என்.ஆர் காங்.,வேட்பாளராக ரங்கசாமி, சுயேட்சையாக கொல்லப் பள்ளி சீனிவாஸ் அசோக் போட்டியிடுகின்றனர். நேற்று முன் தினம் இரவு 9.30 மணியளவில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வீட்டிற்கு அருகிலுள்ள கட்டடத்தில்

புதுச்சேரி : காங்., கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் சூறையாடப்பட்டதால் ஏனாமில் பதற்றம் நிலவுகிறது.

ஏனாம் சட்டசபை தேர்தலில் என்.ஆர் காங்.,வேட்பாளராக ரங்கசாமி, சுயேட்சையாக கொல்லப் பள்ளி சீனிவாஸ் அசோக் போட்டியிடுகின்றனர். நேற்று முன் தினம் இரவு 9.30 மணியளவில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வீட்டிற்கு அருகிலுள்ள கட்டடத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் சோதனை செய்ய சென்றனர். அப்போது சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் உடன் சென்றதால், என்.ஆர் காங்.,கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் விசாரித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.இதன் எதிரொலியாக சுயேட்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக்கின் தேர்தல் அலுவலகம் நள்ளிரவு சூறையாடப்பட்டது. வேட்பாளரின் உறவினர்களையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.சுயேட்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் கொடுத்த புகாரின் பேரில் என்.ஆர்.காங்., பிரமுகர்கள் 8 பேர் மீதும், தன்னை தள்ளி விட்டதாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கொடுத்த புகாரில் கொல்லப்பள்ளி வீரராஜூ சாண்டி உட்பட சிலர் மீதும் ஏனாம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

எம்.பி., குற்றச்சாட்டுவைத்திலிங்கம் எம்.பி., நேற்று அளித்த பேட்டியில், என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி போட்டியிடும் ஏனாம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வீட்டின் பக்கத்தில் உள்ள கட்டடத்தில் அதிகமாக பணம் வைத்திருந்ததால் ஆதாரத்துடன் சுயேட்சை வேட்பாளர் கொல்லபள்ளி சீனிவாஸ் அசோக் ஆதரவாளர்கள் மடக்கி பிடித்தனர்.அதை திசை திருப்ப முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலவரம் உருவாக்கி, பதுக்கி வைத்திருந்த பணத்தை வேறு இடங்களுக்கு மாற்றினர். அதனை தட்டிக் கேட்டவர்களை தாக்கினர். முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக போலீஸ் துறை செயல்படுகிறது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X