தி.மு.க.,வுக்கு ஆயர் ஆதரவு: சர்ச் நிர்வாகம் எதிர்ப்பு 

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்த ஆயரின் நடவடிக்கைக்கு, சர்ச் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.திருப்பூர், சபாபதிபுரத்திலுள்ள டி.இ.எல்.சி., அருள்நாதர் சர்ச் ஆயர் அசோக்குமார் உள்ளிட்ட அமைப்பினர், தி.மு.க., அலுவலகத்துக்கு சென்று, ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு டி.இ.எல்.சி., சர்ச் நிர்வாகத்தில் கடும் எதிர்ப்பு
 தி.மு.க.,வுக்கு ஆயர் ஆதரவு:  சர்ச் நிர்வாகம் எதிர்ப்பு 

திருப்பூர்:திருப்பூரில், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்த ஆயரின் நடவடிக்கைக்கு, சர்ச் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.திருப்பூர், சபாபதிபுரத்திலுள்ள டி.இ.எல்.சி., அருள்நாதர் சர்ச் ஆயர் அசோக்குமார் உள்ளிட்ட அமைப்பினர், தி.மு.க., அலுவலகத்துக்கு சென்று, ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு டி.இ.எல்.சி., சர்ச் நிர்வாகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.டி.இ.எல்.சி., சர்ச் செயலர் ராஜ் சாலமோன் கூறியதாவது:ஆயர் அசோக்குமார், தி.மு.க., வேட்பாளரை கிறிஸ்துவ மக்கள் ஆதரிப்பர் என்று வாக்குறுதி கொடுத்ததை ஏற்க முடியாது. தேவ ஊழியம், பிரசங்கம், ஆலய வழிபாடு செய்வதுதான் ஆயரின் சேவைப்பணி.சர்ச்களில், அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் உறுப்பினராக இருப்பர். சபை குரு என்ற நிலையில் இருக்கும் ஆயர் பொதுவான நபராகத்தான் இருக்க வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் ஆதரிக்க வேண்டும் என்று கூறக்கூடாது.கிறிஸ்துவ மக்கள் தி.மு.க.,வுக்கு முழு ஆதரவை வழங்குவார்கள் என்று கூறியதை யாரும் ஏற்க மாட்டோம். சர்ச் உறுப்பினர்கள், அவரவர் மனசாட்சிப்படி, விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X