எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தென்மாவட்டங்களை புறக்கணித்த கமல், சரத்குமார்

Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருநெல்வேலி: ம.நீ.ம., கமல், ச.ம.க., சரத்குமார் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு வராமல் புறக்கணித்துவிட்டதாக கட்சியினர் அங்கலாய்த்தனர்.தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 6ல் நடக்கிறது. தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே துாத்துக்குடியில் ச.ம.க. பொதுக்குழு கூட்டிய சரத்குமார், நிச்சயம் தேர்தலில்
தென்மாவட்டங்கள், கமல், சரத்குமார், மநீம, சமக

திருநெல்வேலி: ம.நீ.ம., கமல், ச.ம.க., சரத்குமார் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு வராமல் புறக்கணித்துவிட்டதாக கட்சியினர் அங்கலாய்த்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 6ல் நடக்கிறது. தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே துாத்துக்குடியில் ச.ம.க. பொதுக்குழு கூட்டிய சரத்குமார், நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றார். மனைவி ராதிகா, கோவில்பட்டி அல்லது வேளச்சேரியில் போட்டியிடுவார், நண்பர் லாரன்ஸ் ராதாபுரத்தில் களமிறங்குவார் என அறிவித்தார். ஆனால் மூவருமே தற்போது போட்டியிடவில்லை.

இதற்கிடையே ச.ம.க., வேட்பாளர்களான ராதாபுரம் உதிரலிங்கம், நாங்குநேரி சார்லஸ் ராஜா, திருநெல்வேலி அழகேசன் ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடியாகின. இதனால் சரத்குமார் தென்மாவட்டங்களுக்கு வர கூச்சப்பட்டார். அதையும் மீறி ஆலங்குளத்தில் பிரசாரத்திற்கு வர ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி வரை கட்சியினர் முறையான அனுமதி பெறாததால் இனி திருநெல்வேலிக்கே வரப்போவதில்லை என அவர் கூறியுள்ளார். இதைத்தான் உடல்நலம் பாதித்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். சரத்குமாருக்கும், தென்மாவட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில் தற்போது அவர் டிமிக்கி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 6ல் நடக்கிறது. தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே துாத்துக்குடியில் ச.ம.க. பொதுக்குழு கூட்டிய சரத்குமார், நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றார். மனைவி ராதிகா, கோவில்பட்டி அல்லது வேளச்சேரியில் போட்டியிடுவார், நண்பர் லாரன்ஸ் ராதாபுரத்தில் களமிறங்குவார் என அறிவித்தார். ஆனால் மூவருமே தற்போது போட்டியிடவில்லை. இதற்கிடையே ச.ம.க., வேட்பாளர்களான ராதாபுரம் உதிரலிங்கம், நாங்குநேரி சார்லஸ் ராஜா, திருநெல்வேலி அழகேசன் ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடியாகின. இதனால் சரத்குமார் தென்மாவட்டங்களுக்கு வர கூச்சப்பட்டார். அதையும் மீறி ஆலங்குளத்தில் பிரசாரத்திற்கு வர ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி வரை கட்சியினர் முறையான அனுமதி பெறாததால் இனி திருநெல்வேலிக்கே வரப்போவதில்லை என அவர் கூறியுள்ளார். இதைத்தான் உடல்நலம் பாதித்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். சரத்குமாருக்கும், தென்மாவட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில் தற்போது அவர் டிமிக்கி கொடுத்துள்ளார். ம.நீ.ம., சார்பில் தென்மாவட்டங்களில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி டாக்டர் பிரேம்நாத் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் கமல் தென்மாவட்டங்களை புறக்கணித்துள்ளார். தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு கமல் ஒருநாள் கூட திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வரவில்லை. இதனால் வேட்பாளர்கள் கவலையில் உள்ளனர். இருப்பினும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் கமல் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணி செய்கின்றனர்.

ம.நீ.ம., சார்பில் தென்மாவட்டங்களில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி டாக்டர் பிரேம்நாத் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் கமல் தென்மாவட்டங்களை புறக்கணித்துள்ளார். தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு கமல் ஒருநாள் கூட திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வரவில்லை. இதனால் வேட்பாளர்கள் கவலையில் உள்ளனர். இருப்பினும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் கமல் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணி செய்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
03-ஏப்-202118:10:52 IST Report Abuse
MURUGESAN கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உறுதியாக செய்ய கமல் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஆரம்பம்தான். போக போக சரியாகும் என்று நம்புவோம்.
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
03-ஏப்-202117:34:31 IST Report Abuse
சோணகிரி அநீதிமய்யத்துக்கு சங்குதான்... ஊ...
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
03-ஏப்-202113:20:29 IST Report Abuse
ocean தமிழகத்தின் தென்மேற்கு மக்கள் மரியாதை தெரிந்தவர்கள். அதன் தென் கிழக்கு ஜனங்கள் முரடன்கள். எதிலும் எதிர் மறை புத்தி உள்ளவர்கள்
Rate this:
jagan - Chennai,இலங்கை
03-ஏப்-202117:22:59 IST Report Abuse
jaganவட தமிழ் நாட்டு மக்களை போல் எல்லோர் மீதும் வெறுப்பை உமிழ்பவர்கள் எவரும் இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X