பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் வெப்பநிலை அதிகரிக்கும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், சிவகங்கை,
TN,Tamilnadu,Weather,தமிழகம்,தமிழ்நாடு,வானிலை


சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் வெப்பநிலை அதிகரிக்கும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், சிவகங்கை, புதுச்சேரி, காரைக்காலில் 4 மதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்.


latest tamil news


வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகரில் 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.
பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொது வெளியில் வேலை செய்வதை, பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.


latest tamil news



வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 7 ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை


வடக்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் இன்று மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம். மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் பகுதிகளுக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அந்தமானில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு, வடகிழக்கு திசையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால், எண்ணூர் மற்றும் கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஏப்-202103:22:09 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) அடபாவி சுடலை கான் நீ ஆட்சிக்கு வருமுன்னமே இப்புடி சுட்டெரிக்குறியே
Rate this:
Cancel
03-ஏப்-202118:44:22 IST Report Abuse
ஆப்பு போன வருஷம் கொரோனா மக்களை முடக்கிப் போட்டது. இந்த வருஷம் வெயில்.
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
03-ஏப்-202116:14:02 IST Report Abuse
Palanisamy Sekar ஆக இதன் தாக்கத்தால் மண்டையில் வாய்த்த விக்கு உருகி கீழே விழுந்துடாதே? வெதர் ரிப்போர்ட்டர் யாராச்சும் விளக்கமா சொல்லுங்க..விக் குக்கு ஆபத்து நேராம பார்த்துக்கோங்க சுடலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X