வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: பலர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: பலர் மீது வழக்கு

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (13)
Share
சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் பணப்பட்டுவாடாவிற்கு வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிமுக, பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.வரும் 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில்
வாக்காளர், பணப்பட்டுவாடா, அதிமுக, பாஜ, வழக்குப்பதிவு, பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் பணப்பட்டுவாடாவிற்கு வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிமுக, பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வரும் 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக பா.ஜ.,வினர் 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சலீவன் வீதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது 6 வாகனங்கள், ரூ.46 ஆயிரம் ரொக்கம், ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்துறையில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த ரூ.1.10 லட்சம் பணம் அதிமுக ஆதரவாளர் வாசுகி கபிலனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.


latest tamil news



போடி 11வது வார்டு பகுதியில் பொது மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுகவை சேர்ந்த சித்தரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருநது 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.73.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல்லை சேர்ந்த மோகன பிரகாஷ் மற்றும் திருப்பூரை சேர்ந்த அருள் ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது

அண்ணாசாலையில் ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட ரூ.2,65,000 மதிப்பிலான சுடிதார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டிவனம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த கன்டெய்னர் லாரியை சோதனை செய்தனர். டிரைவர் விஜயகுமார் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனையடுத்து லாரியை சோதனை செய்த அதிகாரிகள், 2,380 குக்கர்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை ஆவடி வீட்டுவசதிவாரிய குடியிருப்பில், வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக சென்று, அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். இது தொடர்பாக தகவல் கிடைத்த பறக்கும் படையினர் விரைந்து வந்து அதிமுக நிர்வாகிகள் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.பெட்ரோல் பங்க் மேலாளர் தனசேகரிடம் இருந்து ரூ.11.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X