வளர்ச்சியா, வேலைவாய்ப்பா; ராகுலின் கொள்கை என்ன? : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி : நான் பிரதமரானால் நாட்டின் வளர்ச்சியை விட வேலை வாய்ப்புக்கு தான் முக்கியத்துவம் தருவேன் என ராகுல் பேசினார். இவரின் பேச்சு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.அமெரிக்காவின் ஹார்வர்டு கென்னடி பள்ளியின் பேராசிரியர் நிக்கோலஸ் பர்ன்ஸிடம் ஆன்லைன் வழியாக கலந்துரையாடினார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல். அவர் பேசுகையில், ‛‛இந்தியாவில் தற்போது அரசியல்
PappuPolicy, PMofIndia,

புதுடில்லி : நான் பிரதமரானால் நாட்டின் வளர்ச்சியை விட வேலை வாய்ப்புக்கு தான் முக்கியத்துவம் தருவேன் என ராகுல் பேசினார். இவரின் பேச்சு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

அமெரிக்காவின் ஹார்வர்டு கென்னடி பள்ளியின் பேராசிரியர் நிக்கோலஸ் பர்ன்ஸிடம் ஆன்லைன் வழியாக கலந்துரையாடினார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்.

அவர் பேசுகையில், ‛‛இந்தியாவில் தற்போது அரசியல் அமைப்புகள் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டுவிட்டன. நடுநிலையாக இருக்க வேண்டிய அமைப்புகள் இப்போது அப்படியில்லை. வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குதலுக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும். இதைத்தான் சீனர்கள் செய்கின்றனர். நான் பிரதமரானால் வளர்ச்சியை விட வேலைவாய்ப்புக்கே முக்கியத்துவம் தருவேன். எனக்கு 9% பொருளாதார வளர்ச்சியில் பெரிய ஆர்வமில்லை'' என்றார்.

ராகுலின் இந்த பேச்சு டுவிட்டரில் வைரலாக பரவி டிரெண்ட் ஆனது. சிலர் அவரின் கருத்தை வரவேற்றாலும், பலரும் விமர்சித்தே வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #PappuPolicy என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. அதன் உடன் #PMofIndia என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்குகளில் சிலர் பதிவிட்ட கருத்துக்கள் இங்கே பார்ப்போம்...


latest tamil news



* ராகுல் தான் இந்தியாவின் புத்திசாலியான தலைவர், இவர் பிரதமரானால் இன்னும் என்னென்ன கொள்கைகள் வைத்திருப்பாரோ?
* வளர்ச்சி இல்லாமல் வேலை இல்லை. வேலை இல்லாமல் வளர்ச்சி இல்லை. இரண்டுமே முக்கியம். இது கூட இவருக்கு தெரியவில்லை.
* இவரின் கொள்கை சரித்திர பதிவேட்டில் பொறிக்கப்பட வேண்டும். இப்போது தெரிகிறது நீங்கள் ஏன் பிரதமராக முடியவில்லை என்று?
* இவர் கூறுவது எப்படி தெரியுமா இருக்கிறது. தேர்வில் பதில்களை எழுதுவதற்கு பதிலாக அதிக மதிப்பெண்கள் பெறுவதில் கவனம் செலுத்துவேன் என்பது போன்று உள்ளது.
* எதற்காக ராகுல் இப்போது சீனர்களின் ஏஜென்ட் போல் பேசுகிறார்.
* வளர்ச்சி இல்லாமல் வேலை இல்லை என்பது அவருக்கு புரியவில்லை. இவர் கூறுவது ஓட்டு போடாமல் பிரதமராவது, செக்ஸ் இல்லாமல் குழந்தைகளைப் பெறுவது போன்று உள்ளது. இவரை பொருத்தமட்டில் இந்துக்களை விட சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதில் கவனம் செலுத்துவார். தேசத்தை விட வாத்ரா குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
* ராகுல் இந்தியாவிற்கும் அதன் இறையாண்மைக்கும் ஒரு பேரழிவு. இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று அவர் காண்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-ஏப்-202111:35:00 IST Report Abuse
Sridhar இவனை விடுங்கள். இவனுடன் பேச வந்தார்களே அவர்களை சொல்லுங்கள். அட அவர்களுக்காவது கொஞ்சம் அறிவு இருக்க வேண்டாம்? இவனுக்கு படிப்பு இல்லை. பெரிய சிந்தனையாளர் என்று சொல்லிக்கொள்ள புத்தகங்களோ, கட்டுரைகளோ எழுதியதாக சரித்திரம் இல்லை. இவ்வளவு ஏன், உருப்படியாக ஒரு வேலை பார்த்ததற்கு அத்தாட்சி கூட இல்லை. இருக்கும் அரசியல்கட்சியில் தலைவர் கூட இல்லை. எந்த தைரியத்தில் இவ்வளவு ஆணவம் வருகிறது? இத்தனைக்கும், கிரிமினல் வழக்குகளில் கைதாகி பெயிலில் இருக்கிறான். இந்திய குடியுரிமை கூட கேள்விகுரியாக இருக்கிறது. அகில உலக அளவில் மிகப்பெரிய பணபலம் இல்லாமல் இந்த திமிர் வருவதற்கு சாத்தியமே இல்லை. இதில் வெட்கக்கேடு என்னவென்றால், இந்த மாதிரியான ஆட்களை சுதந்திரமாக நாட்டில் உலாவ விட்டு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்கும் ஒரு அரசு நம்மை ஆளுகிறது
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
04-ஏப்-202110:16:25 IST Report Abuse
mindum vasantham namba oorula stalin பரம்பரை என்றால் அவங்க ஊர்ல அவுக்க , இவர்கள் கொள்கை என்னவென்றால் தேவேந்திர குலா வேளாளர் போன்றோரை நீ பரம்பரை அடிமை என்று நாட்டுக்கெதிராக திருப்புவது
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
04-ஏப்-202105:39:29 IST Report Abuse
NicoleThomson எந்த நாட்டின் வேலைவாய்ப்பு என்று பப்பு சொல்லவே இல்லை நீங்களா முடிவு பண்ணிட்டு கருத்து எழுதறீங்க டிவிட்டேர் மக்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X