பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி முகவர்கள் படிவத்துக்கு விலை உயர்வு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
சட்டசபை தேர்தலில், கட்சி வேட்பாளர், தலைவர், கூட்டணி கட்சியினர் பிரசாரம், பணம் என பல வழியில் ஓட்டு சேகரிக்கின்றனர். இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும், 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து, அவர்களே, அப்பகுதியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை ஓட்டு, யாருக்கு பணம் தர வேண்டும், ஓட்டுப்போட யார் வரவில்லை என பட்டியல் வைத்து, ஓட்டாக்குவர். அவர்களையே அவ்வேட்பாளர், ஓட்டுச்சாவடி

சட்டசபை தேர்தலில், கட்சி வேட்பாளர், தலைவர், கூட்டணி கட்சியினர் பிரசாரம், பணம் என பல வழியில் ஓட்டு சேகரிக்கின்றனர். இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும், 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து, அவர்களே, அப்பகுதியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை ஓட்டு, யாருக்கு பணம் தர வேண்டும், ஓட்டுப்போட யார் வரவில்லை என பட்டியல் வைத்து, ஓட்டாக்குவர். அவர்களையே அவ்வேட்பாளர், ஓட்டுச்சாவடி முகவராகவும், ஓட்டு எண்ணிகை முகவராகவும் நியமிப்பர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு, ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர், மாற்று முகவர் என இருவர் நியமிக்கலாம். வாக்காளர் ஓட்டுப்போட வரும்போது, அடையாள அட்டை உள்ளிட்டவை சரியாக இல்லாத பட்சத்தில், சில சந்தேகத்தின் அடிப்படையில் அந்நபரை அனுமதிக்கலாமா? என தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் கேட்கும்போது, முகவர்களின் ஆதரவு, எதிர்ப்பில் எது மெஜாரிட்டியோ அதை அனுமதிப்பர். இதனால், சில ஓட்டு கூடுதலாக பதிவாகும். வாக்காளர் உள்ளே நுழையும்போது, அறிமுகமான முகவர் அதிகம் இருந்தால், வாக்காளர் மனநிலை மாறி, அக்கட்சிக்கு ஓட்டுப்பதிவாகும். எனவே, பிரதான வேட்பாளர்கள், தங்கள் தரப்பில் ஒரு முகவர், அவருக்கு மாற்று தவிர, தனது கட்சியினர் கூடுதலாக இருக்க, சுயேச்சைகளிடம் முகவர் படிவத்தை விலைக்கு வாங்கி, அவ்வேட்பாளரிடம் படிவத்தில் கையெழுத்து பெறுவர். சராசரியாக, 250 ஓட்டுச்சாவடி உள்ள தொகுதியில், 500 படிவத்தை தலா, 50 முதல், 60 ரூபாய் என பேசி, ரவுண்டாக, 15 ஆயிரம் ரூபாய்க்குள் முன் வாங்கினர். இம்முறை, கிராமப்பகுதி தொகுதியில், ஒரு முகவர் படிவம், 100 ரூபாய்க்கு மேலும், நகரப்பகுதி, வி.ஐ.பி., தொகுதியில், 200 முதல், 250 ரூபாய்க்கு வாங்குகின்றனர். இப்படிவம் மூலம் மட்டும், 80 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாயை ஒரு வேட்பாளர் சம்பாதிக்கிறார். இவர் வேட்பாளராக நிற்க, 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செலுத்தி, பத்து மடங்கு லாபம் பார்க்கும் நிலை உயர்ந்துள்ளது. சில முக்கிய வேட்பாளர்கள், இரண்டு, மூன்று வேட்பாளர்களிடம், மொத்தமாக படிவத்தை வாங்கி பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X