'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' பயன்படுத்துவது எப்படி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
ஒரு கட்டடத்தின் அடித்தளத்தை உறுதியாக அமைக்க தரமான கான்கிரீட் கலவை தயாரிக்க வேண்டும். நாம் கட்டும் எந்த கட்டடமும் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் கான்கிரீட் கலவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், இந்த அவசர உலகில் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க 'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது போல் 'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' பயன்படுத்தும்

ஒரு கட்டடத்தின் அடித்தளத்தை உறுதியாக அமைக்க தரமான கான்கிரீட் கலவை தயாரிக்க வேண்டும்.

நாம் கட்டும் எந்த கட்டடமும் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் கான்கிரீட் கலவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், இந்த அவசர உலகில் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க 'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது போல் 'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். ரெடிமிக்ஸ் கான்கிரீட் வாங்கும் போது அதை தயாரித்த நிறுவனத்திடம் இருந்து கான்கிரீட் கலவை தயாரிக்கப்பட்ட விதம், பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம், அளவு உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக மேல்தளம் அமைக்கும் பணியில், கம்பி கட்டும் பணி முடிந்தபின் முட்டு கொடுத்து வைக்கப்பட்டிருக்கும். பலகைகளில் கான்கிரீட் கசியும் அளவுக்கு துளைகள், இடைவெளிகள் இருக்கிறதா என சரிபார்க்கவும். அப்படி இல்லாவிட்டால் கான்கிரீட் உறுதியின்றி போகும்.ரெடிமிக்ஸ் கான்கிரீட் வந்தவுடன், கான்கிரீட் தரமாக உள்ளதா, எந்த பணிக்காக வாங்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப அது உறுதியாக இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். ஒரு வேளை பயன்படுத்தி விட்டு பின் அதில் ஏதாவது குறை இருந்தால் பல நிறுவனங்கள் அதற்கு பொறுப்பேற்காது.

சரிபார்க்கும் போது கான்கிரீட் கலவையின் திரவம், வெப்ப நிலை என்ன, ஜல்லிகளின் அளவு என்ன, நாம் சொன்ன கிரேடில் அது இருக்கிறதா என கவனிக்க வேண்டும். கான்கிரீட் கொட்டும் போது தேவையற்ற கட்டிகள் எதுவும் உள்ளதா என கவனிக்க வேண்டும். ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் கட்டடத்தில் வெடிப்புகள் ஏற்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X