நீண்டகாலம் உழைக்கும் அலுமினிய ஜன்னல் கொசுவலை | Dinamalar

நீண்டகாலம் உழைக்கும் அலுமினிய ஜன்னல் கொசுவலை

Added : ஏப் 03, 2021
Share
என்ன தான் அழகான ஜன்னல்கள் அமைத்தாலும் அதன் வழி கொசுக்கள் நுழைய தான் செய்யும். அதை தடுக்க நைலான் கொசுவலைகள் பயன்படுத்தினாலும் காலப்போக்கில் சேதமாகி விடும். இப்பிரச்னைக்கு தீர்வாக பல்வேறு வகையான ஜன்னல் கொசுவலைகள் வந்து விட்டன. அலுமினிய கொசுவலைவீட்டு ஜன்னல்களில் பொருத்தும் நைலான் கொசுவலை வேண்டும் போதெல்லாம் கழற்றி, சுத்தம் செய்து பொருத்தலாம். ஆனால் இது எளிதில்

என்ன தான் அழகான ஜன்னல்கள் அமைத்தாலும் அதன் வழி கொசுக்கள் நுழைய தான் செய்யும். அதை தடுக்க நைலான் கொசுவலைகள் பயன்படுத்தினாலும் காலப்போக்கில் சேதமாகி விடும். இப்பிரச்னைக்கு தீர்வாக பல்வேறு வகையான ஜன்னல் கொசுவலைகள் வந்து விட்டன.

அலுமினிய கொசுவலைவீட்டு ஜன்னல்களில் பொருத்தும் நைலான் கொசுவலை வேண்டும் போதெல்லாம் கழற்றி, சுத்தம் செய்து பொருத்தலாம். ஆனால் இது எளிதில் சேதம் அடையும். அதிக காலம் நீடிக்காது, உள்ளே வரும் காற்றின் அளவு குறையும். எனவே தற்போது இதற்கு மாற்றாக அலுமினிய கொசுவலை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.இது நுழைவாயில் கதவு, ஜன்னல் கதவுகளுக்கு இணையாக பொருத்தப்படுகிறது. இந்த அலுமினிய வலை எளிதில் சேதமடையாது. நீடித்து உழைக்கும். ஜன்னல் கதவை மட்டும் திறந்து வைத்தால் போதும். அலுமினிய வலை கொசுக்களைத் தடுக்கும். காற்றும் நன்றாக வரும்.

கண்ணாடி, மரம், இரும்பு என அனைத்து வகை ஜன்னல்களிலும் இந்த அலுமினிய வலையை பொருத்தலாம். இதை பக்கவாட்டிலும், மேலிருந்து கீழ், திறந்து மூடும் வகையிலும் அமைக்கலாம். மடிப்பு முறையிலும் அமைக்கலாம்.ஆரோக்கியமாக இருக்கலாம் இதில் திறந்து மூடும் வகையை விட பக்கவாட்டில் மூடும் கொசுவலையை அமைப்பது தான் சிறந்தது. இதை எளிதில் அசைத்து பயன்படுத்த முடியும்.

ஆனால், கொசு வலை நகரும் டிராக்கில் சேரும் துாசிகளை அவ்வப்போது அகற்றி, சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும். அலுமினிய வலையையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாம். இந்த முறையை பின்பற்றினால் கொசுக்களை விரட்டி விடலாம். கொசு கடிக்காமல் இருக்க நச்சு கொசு விரட்டிகள் பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X