அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டி.எம்.கே.,' வுக்கு புது விளக்கம் கொடுத்த நட்டா

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
மொடக்குறிச்சி: ''இரண்டு முறை, தி.மு.க.,- காங்., ஆட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டோம். மூன்றாவது முறையாகவும் பின்னுக்குத் தள்ளுவோம்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சிவகிரியில், பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கத்துடன் தன் பேச்சை துவக்கினார்.அவர்
nadda, bjp, dmk, jpbadda, admk, stalin, பாஜ, நட்டா, ஜேபி நட்டா, திமுக, ஸ்டாலின், அதிமுக

மொடக்குறிச்சி: ''இரண்டு முறை, தி.மு.க.,- காங்., ஆட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டோம். மூன்றாவது முறையாகவும் பின்னுக்குத் தள்ளுவோம்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சிவகிரியில், பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கத்துடன் தன் பேச்சை துவக்கினார்.

அவர் பேசியதாவது: மொடக்குறிச்சி தொகுதியில்,1,000 ஆண்டு பழமை வாய்ந்த ஆலயங்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த தலைவர்கள் கிடைத்துள்ளனர். குறிப்பாக சுதந்திரத்திற்காக பாடுபட்ட திருப்பூர் குமரன், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் வளர்க்க போராடியவர்கள். உலகத்தில் பழமை வாய்ந்த மொழி நமது தமிழ்மொழி. நமது பூமி ஒரு புண்ணிய பூமி.கலாச்சார பூமி. எம்பெருமான் முருகன் ஆசியுடன் ஒரு உத்வேகம் தமிழகத்தில் பிறந்துள்ளது. பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ்மொழியை பறைசாற்றி பேசுகிறார். கணியன் பூங்குன்றனார் கூறிய, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மொழியை, ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்ற ஒரே பிரதமர் நமது மோடி.

மோடி அரசாங்கம் நமது முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை உருவாக்கி உள்ளது. நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி. நல்ல கூட்டணியாக அமைந்துள்ளது. ஆனால், தி.மு.க.,- காங்., கூட்டணி, குடும்பத்தை வளர்க்கும் கூட்டணியாக உள்ளது. இரண்டு முறை, தி.மு.க.,- காங்., ஆட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டோம். மூன்றாவது முறையாகவும் பின்னுக்குத் தள்ளுவோம். கட்டப் பஞ்சாயத்தும், பெண்களைக் இழிவு படுத்துவதும், கடவுளை அவமானப்படுத்துவதுமே திமுகவினரின் வேலையாக உள்ளது.


latest tamil newsஊழல், ஊழல், ஊழல் மட்டுமே, தி.மு.க.,- காங்., ஆட்சியில் நடந்தது. அதை விட்டால் குடும்ப அரசியல் நடத்துவது. இதுதான் எதிர்க்கட்சியினர் செய்கின்ற வேலையாக உள்ளது. 2ஜி இரண்டு தலைமுறைகளாக மாறன் சகோதரர்கள், 3ஜி ஸ்டாலின், 4ஜி காங்கிரஸ் என தலைமுறை தலைமுறையாக ஊழலை கையாண்டு வருகின்றனர். டி என்றால், 'டைனாஸ்டி' எனும் பரம்பர பரம்பரையாக குடும்ப அரசியல், எம் என்றால், 'மணி'; அதாவது -பணம் பார்ப்பது, கே- என்றால், 'கட்ட பஞ்சாயத்து' செய்வது. இதுதான் டி.எம்.கே. எனும், தி.மு.க., கட்சியாகும்.

தி.மு.க., இந்த தேர்தலில் நிச்சயம் தோல்வியடையும். தினம் தினம் பெண்களுக்கு எதிராக, தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர். இதனால் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., -காங்., கட்சியினர் ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் தடை விதித்தனர். ஆனால், மோடி அரசாங்கம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு உண்டான தடையை நீக்கியது. மோடி அரசாங்கம் பதவியேற்ற நாள் முதல், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடித்துச் செல்வது குறைந்துள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் அமைப்பை பட்டியலில் சேர்த்துள்ள பெருமை மோடி அரசாங்கத்திற்கு உண்டு. கருப்பர் கூட்டங்கள், கடவுளுக்கு எதிராக பிரசாரங்கள் வெளியிடுவதை ஸ்டாலின் ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை; கண்டிக்கவும் இல்லை. ஆனால், நாம் வேல் யாத்திரை பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது, மக்கள் ஒரு உத்வேகமாக புரட்சிகரமாக வெகுண்டெழுந்தனர். நாம் வேல் யாத்திரையை கையில் எடுப்பதை பார்த்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேல் தூக்கும் பணியில் ஈடுபடுவது மக்களை ஏமாற்றும் நாடகம்.

நாட்டில், 13வது நிதிக்குழு மானியத்தில் முந்தைய அரசு, 94 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு ஒதுக்கியது. அதைவிட நான்கரை மடங்கு நிதியாக, 5 லட்சத்து, 45 ஆயிரத்து, 42 கோடி தமிழகத்திற்கு மோடி அரசாங்கம் நிதி ஒதுக்கியது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளனர். வளர்ச்சிநிலை திட்டங்களுக்காகவும் பல திட்டங்களை மோடி உருவாக்கியுள்ளார்.

பாதுகாப்பு மையத்திற்கு, 7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை, ஓசூர், சேலம் போன்ற நகரங்களில் இதன் வளர்ச்சியைக் மேம்படுத்த உதவியாக இருக்கும். மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, 3,270 கோடி ரூபாய் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும், 11 மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்திற்கு மத்திய அரசு மூலம் கிடைத்துள்ளன. முத்ரா வங்கி கடன் திட்டத்தில், 8,000 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு பல்வேறு நலத் திட்டங்கள் மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டுள்ளன வரும் தேர்தலில் கட்டப்பஞ்சாயத்து ஆட்சி வேண்டுமா? மின்தடை ஆட்சி வேண்டுமா? கலாசாரத்தை இழிவுபடுத்தும் ஆட்சி வேண்டுமா? ஊழல் மிகுந்த அரசு வேண்டுமா? என மக்கள் எண்ணிப் பார்த்து ஓட்டு போடுங்கள். காங்.,-திமுக கூட்டணி ஒரு குடும்ப அரசியல் கூட்டணி. பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணி, வெற்றிக் கூட்டணி. மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெறுவார். மீண்டும் நான் இங்கு வந்து பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேச தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
04-ஏப்-202110:26:49 IST Report Abuse
vbs manian எல்லாம் சரி .கணித மேதை ராமானுஜம் காவிரிக்கரை சேர்ந்தவர். கணிதம் தவிர எதை பற்றியும் எண்ணாதவர்.. உலகமே மெச்சியது.அனால் அவர் பொது வாழ்வு அரசியல் ஈடுபட்டதாக எந்த குறிப்பும் இல்லை.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
04-ஏப்-202111:38:41 IST Report Abuse
Hariஒருவேளை கருணாநிதி மாதிரி கொள்ளை ,தமிழனை கொலை செய்து கணக்கு போடும் கலை கணிதமேதை ராமானுஜத்திற்கும் இருக்கும் என எண்ணிவிடக்கூடாது பாருங்க அதனாலதான் காவிரிக்கரை மாவட்டத்தை அவருக்கு துணையாக சொல்லாமல் தமிழகத்தில் பிறந்த மேதைகள் என குறிப்பிடும் எண்ணத்தில் பேசி உள்ளார் இதில் தவறு ஒன்றும் இல்லை...
Rate this:
Cancel
SIRUVEERAN - chennai,இந்தியா
04-ஏப்-202109:56:49 IST Report Abuse
SIRUVEERAN ஏ டி எம் கேயிலும் டி எம் கே என்ற எழுத்துக்கள் உள்ளது என்று இந்த அறிவாளிக்கு தெரியாதா ஏதோ வாய்க்கு வந்ததை சொல்ல வேண்டியது இவரைப்போன்ற ஆட்கள்தான் மந்திரிகள்
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
04-ஏப்-202111:34:06 IST Report Abuse
Hariஅய்யா அவரு மந்திரி இல்ல...
Rate this:
Cancel
04-ஏப்-202100:23:37 IST Report Abuse
Krishna Murthy பானிபூரி விக்கரவங்களாம் இங்க வந்து பன்ச்சி டயலாக் பேசுகிறார்கள்
Rate this:
Durai - Kozhikode,இந்தியா
04-ஏப்-202109:22:44 IST Report Abuse
Duraiஅவர் சொல்லும் கருத்துக்கு ஏதாவது மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்கள். கீழ்த்தரமான விமர்சனங்கள் தேவை இல்லை....
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
04-ஏப்-202111:45:34 IST Report Abuse
Hariஉங்களுக்கு தெரியுமா பானிபூரி ,போர்வை தலையணை விற்பது எல்லாம் யார் என தனிநபர் ஒழுக்கம் முக்கியம் அதை வெளிப்படுத்துங்கள் நல்லது. அடுத்தவனை ஆட்டைய போடாமல் (2ஜி கொள்ளை) உழைத்து பொழைக்கும் எல்லோரும் உத்தமர்கள் , நீங்க என்னதான் ஜல்லடை போட்டு தேடினாலும் தி மு கா வில் ஒரு யோக்கியனை காண்பிக்க முடியுமா.(அதுக்காக அ தி மு க யோக்கியர்கள் என சொல்ல வரல அவர்கள் நேரடி திருடர்கள் என்றால் தி மு க எதையும் பணத்திற்காக செய்யும் சம்பல் கொள்ளையர்கள்)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X