அறிவியல் ஆயிரம்
உடல் எடை குறைய...
இன்றைய சூழலில் பலரும் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் உணவை வேகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, மெதுவாக சாப்பிடுபவர்களுக்கு எடை குறையும் வாய்ப்பு உள்ளது என பிரிட்டன் ஆய்வு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இளைஞர், சிறுவர் என 800 பேரிடம் அவர்களது உயரம், எடை, பி.எம்.ஐ., மற்றும் அவர்களின் உணவு சாப்பிடும் முறை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. இதில் மிக வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை குறையாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் சுரங்கம்
எத்தனை துணை முதல்வர்
இந்தியாவில் 28 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் என 30 முதல்வர்கள் உள்ளனர். ஆனால் 15 மாநிலம், ஒரு யூனியன் பிரதேசத்தில் மட்டும் துணை முதல்வர்கள் உள்ளனர். மற்ற மாநிலத்தில் துணை முதல்வர் பதவி இல்லை. இப்பதவி குறித்து சட்டத்தில் எதுவும் இல்லை. இருப்பினும் நிர்வாக வசதிக்காக அந்தந்த மாநிலம் நியமித்துக்கொள்கின்றனர். இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் உள்ளனர். இதற்கடுத்து கர்நாடகாவில் மூன்று பேர், பீஹார், கோவா, உத்தரபிரதேசத்தில் தலா இரண்டு பேர் துணை முதல்வராக உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE