ஆயுத போராட்டத்தை கைவிடுங்க: இளைஞர்களுக்கு மோடி அறிவுரை

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமுல்புர்:''ஆயுதப் போராட்டம், வன்முறையை கைவிட்டு, தற்சார்பு அசாமை உருவாக்க, இளைஞர்கள் முன்வர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.அசாமில், முதல்வர் சர்பானந்த சோனாவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நேற்று, போடோலாந்து பிராந்தியத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி
 ஆயுத போராட்டத்தை கைவிடுங்க: இளைஞர்களுக்கு மோடி அறிவுரை

தமுல்புர்:''ஆயுதப் போராட்டம், வன்முறையை கைவிட்டு, தற்சார்பு அசாமை உருவாக்க, இளைஞர்கள் முன்வர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அசாமில், முதல்வர் சர்பானந்த சோனாவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நேற்று, போடோலாந்து பிராந்தியத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:தங்கள் அரசியல் ஓட்டு வங்கிக்காக, இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தள்ளியது காங்கிரஸ். அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில், பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடிய மக்களை மீட்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., அரசு அமைந்த பின், வளர்ச்சி பணிகள் துவங்கின. போராட்டங்களை கைவிடுவதற்காக, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதையடுத்து, ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்துக்கு மக்கள் திரும்பியுள்ளனர்.இதுவரை வன்முறையைக் கைவிடாதவர்களையும், நாட்டின் வளர்ச்சியில்இணைந்து கொள்ள அழைக்கிறேன்.

தற்சார்பு அசாமை உருவாக்க வாருங்கள்.ஏ.ஐ.டி.யு.எப்., எனப்படும், நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், அது மதச்சார்பின்மை. ஆனால், நம் நாட்டு மக்களுக்கு ஆதரவாக, நம் பாரம்பரியத்தை பற்றி நாங்கள் பேசினால், அது மதவாதம். ஓட்டு அரசியலை மட்டும் நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு, மற்றொரு படிப்பினையை தருவதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.இவ்வாறு அவர் பேசினார்.


'வளர்ச்சிக்கு மம்தா தடை'

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ள மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஹூக்ளி மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:சிங்குர் மாவட்டத்தில் கார் தொழிற்சாலை அமையவிருந்ததை, தன் அரசியல் நோக்கங்களுக்காக மம்தா பானர்ஜி எதிர்த்தார். அதனால், மாநிலத்தில் தொழில் வளர்ச்சி அடையவில்லை. விவசாயிகளுக்காக போராடியதாக கூறிய அவர், விவசாயிகளுக்கும் எதையும் செய்யவில்லை.

சொந்த அரசியல் காரணங்களுக்காக மாநிலத்தையும், மாநில மக்களையும் ஏமாற்றிய ஒரே கட்சி, திரிணமுல் காங்., தான். தற்போது தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், தேர்தல் ஆணையம் குறித்தும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் குறித்தும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.பணம் வாங்கிக் கொண்டு, என் கூட்டங்களுக்கு மக்கள் வருவதாகக் கூறி, மேற்கு வங்க மக்களையும் அவமதித்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஏப்-202107:00:09 IST Report Abuse
ஆப்பு ஐயா மோடி அவர்களே... முதல்ல நீங்களும், யோகியாரும் உ.பி யை முன்னேத்துங்க. புலம்பெயர் தொழிலாளர்கள் பஞ்சம் பொழைக்க அங்கேருந்துதான் நிறைய தமிழகத்துக்கு வர்ராங்க.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
04-ஏப்-202100:26:34 IST Report Abuse
மதுரை விருமாண்டி மம்தா வேண்டாமுன்னு சொன்ன டாடா நானோ கார் தொழிற்சாலையை டாடா மூடி பூட்டை தொங்கப்போட தயாராக உள்ளது. பாஜாக்கா அரசு மாதிரி படுதோல்வி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X