சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலத்தில் பறக்கும் படை அதிரடி- ரூ.11,90,000 பறிமுதல்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி அமுதா, ஐஜேகே வேட்பாளர் பார்த்தசாரதி உட்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். பண பட்டுவாடா துவங்கியதால் தேர்தல் பறக்கும் படை குழுவினர் உஷார் படுத்தப்பட்டனர். அதன்படி
விருத்தாசலத்தில் பறக்கும் படை அதிரடி- ரூ.11,90,000 பறிமுதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி அமுதா, ஐஜேகே வேட்பாளர் பார்த்தசாரதி உட்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
பண பட்டுவாடா துவங்கியதால் தேர்தல் பறக்கும் படை குழுவினர் உஷார் படுத்தப்பட்டனர். அதன்படி இன்றிரவு 7:00 மணியளவில் பறக்கும் படை அதிகாரி லெனின் தலைமையிலான குழுவினர் விருத்தாசலம் விஎன்ஆர் நகரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் தனது டூவீலரை நிறுத்தி விட்டு சாவியை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தார். அதிகாரிகள் விசாரணையில் அந்த டூவீலர் பெட்டியில் 11 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கம் கவர்களில் பேக்கிங் செய்யப்பட்டு இருந்தது.
தப்பியோடிய நபர்யார் எந்த கட்சியை சார்ந்தவர் என தெரியவில்லை. பறக்கும் படை அதிகாரி லெனின் தலைமையிலான குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து தாசில்தார் சிவக்குமார் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் லெனின் புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X