நேரலையின்போது ரஷ்ய பத்திரிகையாளர் மைக்கை பிடுங்கிச் சென்ற நாய்..!

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மாஸ்கோ: பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு பலவித சிரமங்கள் ஏற்படுவது வாடிக்கை. இதிலும் களத்துக்குச் சென்று களநிலவரத்தை தொலைக்காட்சி நிலையத்திற்கு நேரலையில் செய்தியாக அளிப்பவர்களுக்கு தொல்லைகள் அதிகம். புயலடிக்கும் இடத்துக்குச் சென்று மைக்கைப் பிடித்து கேமரா முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது காற்றில் தலைமுடி பறக்கும், அல்லது மைக் கீழே விழும், இடி

மாஸ்கோ: பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு பலவித சிரமங்கள் ஏற்படுவது வாடிக்கை. இதிலும் களத்துக்குச் சென்று களநிலவரத்தை தொலைக்காட்சி நிலையத்திற்கு நேரலையில் செய்தியாக அளிப்பவர்களுக்கு தொல்லைகள் அதிகம்.latest tamil newsபுயலடிக்கும் இடத்துக்குச் சென்று மைக்கைப் பிடித்து கேமரா முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது காற்றில் தலைமுடி பறக்கும், அல்லது மைக் கீழே விழும், இடி சத்தம் ஏற்படும். இதுபோல பலவித வேடிக்கை சம்பவங்கள் உலகம் முழுவதும் களத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்படும். சில சுவாரசியமான எதிர்பாராத சம்பவங்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப படுவதுண்டு. இது அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். இதேபோல் சமீபத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த ஓர் ஊடகத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் மிர் டிவி என்கிற தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் பத்திரிக்கையாளர் நட்டாஷா சேக்ஸ்கினா. நட்டாஷா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வசந்த கால வருகையையொட்டி பொது இடத்தில் நின்று கேமரா முன்னிலையில் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். இது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக திரையிடப்பட்டது.


சிரிப்பலையில் தொகுப்பாளர்கள்ரஷ்யாவில் வசந்த காலத்தில் செல்லப்பிராணிகளை வாக்கிங் அழைத்துச் செல்ல பலர் விரும்புவர். இதுகுறித்து நடாஷா பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே சுற்றிக் கொண்டிருந்த ஓர் கோல்டன் ரீட்ரைவர் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று தன்னைப் பற்றி பேசுவதை எப்படியே உணர்வுபூர்வமாக அறிந்துகொண்டு(!) வேகமாக வந்து நடாஷாவின் மைக்கைப் பிடுங்கி சென்றது. அதனை நடாஷாவும் விடாமல் பின்தொடர்ந்து சென்றார். இதனைக்கண்டு தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.


சிறப்பு விருந்தினராக மாறிய நாய்latest tamil newsஉடனே நேரடி ஒளிபரப்பை தடை செய்து தடங்கலுக்கு வருந்துகிறோம் எனக் கூறினார் நெறியாளர். இந்த சம்பவத்தில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் இதுவரை இருமுறை நடாஷா நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கும்போது இவ்வாறு செய்துள்ளது. தற்போது நட்டாஷா பேசிய அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்த நாய் மாறிவிட்டது என்றால் அது மிகையில்லை. இந்த வீடியோ யூடியூப் தளத்தின் வைரலாகி வருகிறது. சோகமான விஷயம் என்னவென்றால் மைக் செயலிழந்து போனது..!

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raskoolu - Madurai,இந்தியா
04-ஏப்-202105:03:22 IST Report Abuse
raskoolu திருட்டு அரசியல்வாதிக்கு விலை போன டிவி காரனோட மைக்க இப்பிடி தான் புடுங்கி குப்பையில போட்றனும்ன்னு சொல்லுது இந்த குட்டி லொல்ஸ்.
Rate this:
Cancel
03-ஏப்-202123:23:54 IST Report Abuse
Vishnu Kumar very good
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஏப்-202123:09:11 IST Report Abuse
தமிழவேல் ஐடோப்பிய கண்டத்த்ஹில், பலநாடுகளில் நாய்களை கயிறு இல்லாமல் வெளியே கொண்டு போகக்கூடாது. அதுபோல, வயல் போன்ற தனி இடங்களில், நாய்களுக்கு விளையாட்டு காண்பிக்க, அதை ஓடவைக்க, குச்சிகளை தூக்கி தூரத்தில் எறிவார்கள் (ஆற்றில்கூட) நாய் ஓடிப்போய் அதை கொண்டுவந்து கொடுத்து, திருப்பவும் செய்ய எதிர்பார்க்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X