பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சட்டசபை பொதுத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம், இன்று இரவு, 7:00 மணியுடன் ஓய்கிறது. பணப் பட்டுவாடாவைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'புதுச்சேரியில் இன்று முதல், வரும் 7ம் தேதி காலை, 7:00 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' .தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தல்,
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சட்டசபை பொதுத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம், இன்று இரவு, 7:00 மணியுடன் ஓய்கிறது. பணப் பட்டுவாடாவைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'புதுச்சேரியில் இன்று முதல், வரும் 7ம் தேதி காலை, 7:00 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'

.தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், ஒரே கட்டமாக, வரும், 6ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், மார்ச், 12ல் துவங்கி, 19ல் நிறைவடைந்தது. மறுநாள், 20ம் தேதி, வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.


ஐந்து முனைப் போட்டி


தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட, 6,181 ஆண்கள், 1,071 பெண்கள் என, மொத்தம், 7,255 வேட்புமனுக்கள் வந்தன. இவற்றில், 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 4,449 மனுக்கள் ஏற்கப்பட்டன.வேட்புமனுவை வாபஸ் பெற, 22ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டது. 451 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். அன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இறுதியாக, 234 சட்டசபை தொகுதிகளில், 3,585 ஆண்கள்; 411 பெண்கள்; இரண்டு, மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 3,998 பேர் களத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், 12 பேர் போட்டியிடுகின்றனர். இதுவரை இல்லாத அளவில், இந்த தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., - மக்கள் நீதி மய்யம் என, நான்கு கூட்டணிகள், 234 தொகுதிகளிலும், வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கூட்டணி அமைக்காமல், நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் களம் இறங்கியுள்ளது.இது தவிர, சிறிய கட்சிகள் சில தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர்.

முதல் முறையாக, ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இதே நிலை, புதுச்சேரியிலும் உள்ளது. இரு மாநிலங்களிலும், அரசியல் கட்சி தலைவர்கள், கொரோனா குறித்து கவலைப்படாமல், தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த மாதத்தில் இருந்து, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, பிரசாரம் செய்தனர்.


திரையுலகினர்

அ.தி.மு.க., சார்பில், முதல்வர்பழனிசாமி., துணை முதல்வர் பன்னீர்செல்வம்., கொள்கை பரப்பு துணை செயலர் நடிகை விந்தியா மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள், பிரசாரம் செய்தனர். தி.மு.க.,வில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி, இளைஞர் அணி செயலர் உதயநிதி, நட்சத்திரப் பேச்சாளர்கள் லியோனி, ராசா என, பலரும் பிரசாரம் செய்தனர்.


தேசிய தலைவர்கள்

பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, தேசிய தலைவர் நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பலர், தமிழகம் வந்து பிரசாரம் செய்தனர்.காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல், மாநிலத் தலைவர் அழகிரி மற்றும் பல்வேறு தேசிய தலைவர்களும் பிரசாரம் செய்தனர்.

அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன் என, பல்வேறு கட்சி தலைவர்கள், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


144 தடை உத்தரவு

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வீதி வீதியாக சென்று, ஓட்டு சேகரித்தனர். ஒரு மாதமாக களைகட்டிய தேர்தல் பிரசாரம், இன்று இரவு, 7:00 மணிக்கு நிறைவடைகிறது. அதன்பின், பிரசாரம் செய்ய, தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.முதல்வர் பழனிசாமி, எடப்பாடியிலும், துணை முதல்வர்பன்னீர்செல்வம்., போடியிலும், ஸ்டாலின் கொளத்துாரிலும், கமல் கோவை தெற்கு தொகுதியிலும், சீமான், திருவொற்றியூரிலும் பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர்.

நாளை, ஓய்வு நாள். நாளை மறுதினம் காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கும்.அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க, புதுச்சேரியில், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், போலீசார் மற்றும் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஏப்-202115:13:57 IST Report Abuse
ஆப்பு அதான் தெரியுதே... பரப்புரை டைம் எல்லாம் முடிஞ்ச பின்னாடி பெரியவர் திடீர்னு கொரோனா பரவல் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துனாராமே...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
04-ஏப்-202109:23:15 IST Report Abuse
blocked user பொதுமக்கள் சந்தோசப்படுவார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X