போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கிடுக்கிப்பிடி: இணையதளத்தில் பெயர் வெளியாகும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கிடுக்கிப்பிடி: இணையதளத்தில் பெயர் வெளியாகும்

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறுவோரின் பெயர்களை, அந்தந்த மாநில போக்குவரத்துத் துறை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்களுக்கு அடையாளப் படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மோட்டார் வாகன சட்ட விதிகளில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தங்கள், கடந்த, 1ம் தேதி முதல் அமலுக்கு
 போக்குவரத்து விதி, கிடுக்கிப்பிடி, இணையதளம், பெயர், மோட்டார் வாகன சட்ட விதி

புதுடில்லி: போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறுவோரின் பெயர்களை, அந்தந்த மாநில போக்குவரத்துத் துறை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்களுக்கு அடையாளப் படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்ட விதிகளில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தங்கள், கடந்த, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், மோட்டார் வாகன போக்குவரத்து விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது, கடும் அபராதம், சிறை தண்டனை, ஓட்டுனர் உரிமம் ரத்து என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


விபத்து

ஆனால், போக்குவரத்து விதிகளை, மீறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடிபோதையிலும், அதிவேகமாகவும், வாகனங்களை ஓட்டி, விபத்துக்களை ஏற்படுத்துவோர் எண்ணிக்கை குறையவில்லை. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதும் அதிகரித்து வருகிறது. நம் நாட்டில், சாலை விபத்துகளில், ஆண்டுக்கு பல லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். அதனால், போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறுவோரின், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இனி, அவர்களை பொது மக்களுக்கு அடையாளப் படுத்தும் வகையில், அவர்களது பெயர் மற்றும் ஓட்டுனர் உரிமம் எண்ணை, அந்தந்த மாநில போக்குவரத்து துறையின் இணையதளத்தில் வெளியிடும் வகையில், சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனினும், தங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, அவர்கள் ஒரு மாதத்துக்குள் மேல் முறையீடு செய்திருந்தால், அவர்களின் பெயர் வெளியிடப்பட மாட்டாது.இதற்காக, மாநில போக்குவரத்துத் துறை இணையதளத்தில், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்கள் என்ற பிரிவு ஏற்படுத்தப்படும்.


மாற்றம்

அதில், அவர்களது பெயர்கள், ஓட்டுனர் உரிம எண் ஆகியவை வெளியிடப்படும். போக்குவரத்து துறை தொடர்பான சேவைகளை, 'ஆன்லைன்' வழியாகவே பெறவும், மோட்டார் வாகன சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X