பொது செய்தி

இந்தியா

பாகுபாடின்றி மக்கள் பணி செய்வேன் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
பாகூர்: பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று குருவிநத்தம் பகுதியில் வீடு வீடாகச் சென்று , உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அந்த பகுதி மக்கள் அவருக்கு, மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் செந்தில்குமார் பேசியதாவது: பாகூரை மேம்படுத்தும் போது, சுற்றியுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், பொருளாதார மேம்பாடாக இருக்கும்

பாகூர்: பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று குருவிநத்தம் பகுதியில் வீடு வீடாகச் சென்று , உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அந்த பகுதி மக்கள் அவருக்கு, மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் செந்தில்குமார் பேசியதாவது: பாகூரை மேம்படுத்தும் போது, சுற்றியுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், பொருளாதார மேம்பாடாக இருக்கும் பாகூரில் பஸ் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, சமுதாய நல வழி மையமாக மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இளைஞர்கள், பெண்கள், மீனவர்கள், விவசாய தொழிலாளர்கள் என அனைவருக்கும், வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் பயிற்சி திட்டங்களை செயல்படுத்துவேன். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இலவச மனைப்பட்டா, சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.குருவிநத்தம் கிராமத்திற்கு சுடுகாட்டு பாதை சீரமைப்பு, பாகூரில் மகளிர் கல்லுாரி, பாகூரில் உள்ள ஏரி, மூலநாதர் கோவில், மணப்பட்டு கடற்கரை சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும்.குருவிநத்தம் கிராமத்தில் தரம் வாய்ந்த ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைப்பேன். பாகுபாடு இல்லாமல், மக்கள் எண்ணத்தை சட்டசபையில் பிரதிபலிப்பேன். உதய சூரியன் சின்னத்தில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.''

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X