திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் சோம்பட்டு கிராமத்தில் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் சோம்பட்டு கிராமத்தில் உள்ள பவழக்குடி சித்தர் கோவிலில் தரிசனம் செய்து, வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பேசுகையில், நான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், கிராமத்திற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அரசு தொடக்கப் பள்ளி மேம்படுத்தப்படும். குடிசை வீடுகள் கல் வீடுகளாக மாற்றியமைக்க, மானியத் தொகை வழங்கப்படும். மகளிர் குழுவினர் சுய தொழில் துவங்க கடனுதவி அளிக்கப்படும்,என்றார்.முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர்கள் முத்தழகன், வீரராகவன், தமிழ்மணி, சிவா, வேல்முருகன், ஏழுமலை, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE