புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றி பாதுகாப்பு அளிப்பேன் என வேட்பாளர் நேரு உறுதி அளித்தார். உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை வேட்பாளர் நேரு, உருளையன்பேட்டையில் நேற்று வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில்; நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது உருளையன்பேட்டை வார்டுக்கு உட்பட்ட குபேர் நகர், முடக்கு மாரியம்மன் கோவில் தெரு, காமராஜ் வீதி, சுப்ரமணியசிவா வீதி, வாஞ்சிநாதன் வீதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்க வழி செய்தேன். வாய்க்கால் வசதிகள் மேம்படுத்தி, சிமெண்ட சாலைகளாக மாற்றினேன். கண்டாக்டர் தோட்டம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 384 அரசு குடியிருப்புகளுக்கு கழிப்பிட வசதிகள் செய்து கொடுத்தேன். புதிய மின் மாற்றி அமைத்து, தடையில்லா மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தேன். முக்கிய இடங்களில் ஹைமாஸ் விளக்கு பொருத்தினேன். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேல் நிலை நீர்தேக்க தொட்டி அருகில் உள்ள மாதா கோவிலிலுக்கு புதிதாக மின் இணைப்பு அமைத்து கொடுத்தேன்.மீண்டும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றவுடன், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவேன், உரிய பாதுகாப்பு அளிப்பேன். எனக்கு, பானை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE