பொது செய்தி

இந்தியா

இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
வில்லியனுார்: ஊசுடு தொகுதி பா.ஜ., வேட்பாளர் சாய் சரவணன்குமார் என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொண்டமாநத்தம் மீனாட்சியம்மன் கோவில் தெரு, மாங்குளம், மாரியம்மன் கோவில் தெரு, மற்றும் எஸ்.எஸ்.நகர் மற்றும் சுற்றியுள்ள புதிய நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.வேட்பாளருக்கு மாலை மற்றும் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து பொதுமக்கள்

வில்லியனுார்: ஊசுடு தொகுதி பா.ஜ., வேட்பாளர் சாய் சரவணன்குமார் என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொண்டமாநத்தம் மீனாட்சியம்மன் கோவில் தெரு, மாங்குளம், மாரியம்மன் கோவில் தெரு, மற்றும் எஸ்.எஸ்.நகர் மற்றும் சுற்றியுள்ள புதிய நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.வேட்பாளருக்கு மாலை மற்றும் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:நான் வெற்றி பெற்றால் தொண்டமாநத்தம் கிராமத்தில் தடையில்லாமல் சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். கிடப்பில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன். மீனாட்சியம்மன் கோவில் தேர் சரி செய்து தருவேன். தொண்டமாநத்தம் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் வசதி, அனைத்து பகுதியிலும் எல்.ஈ.டி., தெரு மின் விளக்கு வசதிகளை செய்து தருவேன். வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார். பா.ஜ., நிர்வாகிகள் தமிழரசன், மனோகரன், என்.ஆர்.காங்., சத்திமுருகன், புஷ்பராஜ், ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X