பொது செய்தி

இந்தியா

சிறுபான்மையின மக்கள் காவலனாக இருப்பேன் உழவர்கரை சுயே., வேட்பாளர் சிவசங்கர் பிரசாரம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் சுயேட்சையாக காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதுச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் நேற்று உழவர் கரை, ரெட்டியார் பாளையம் பகுதியில் சிறுபான்மையினரிடம் ஆதரவு திரட்டினார்.அப்போது அவர் பேசுகையில், மதநல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் உழவர்கரை தொகுதி. வெற்றி பெற்றதும் மதநல்லிணக்கத்தை பாதுகாப்பதோடு,

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் சுயேட்சையாக காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதுச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் நேற்று உழவர் கரை, ரெட்டியார் பாளையம் பகுதியில் சிறுபான்மையினரிடம் ஆதரவு திரட்டினார்.அப்போது அவர் பேசுகையில், மதநல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் உழவர்கரை தொகுதி. வெற்றி பெற்றதும் மதநல்லிணக்கத்தை பாதுகாப்பதோடு, சட்ட சபையில் சிறுபான்மையினர் நலனுக்காக குரல் கொடுப்பேன். அவர்களுக்கான அனைத்து உரிமைகளையும், நலத்திட்ட உதவிகளையும் விரைவாக பெற்றுத் தருவேன், என்றார்.பின், மூலக்குளம், அஜிஸ் நகர், ஜவகர் நகர், பொன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், இன்ஜினியரிங் காலனி பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள், இப்பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. குடிநீர் கலங்கலாக வருகிறது. ஏழைகளுக்கு மஞ்சள் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதனை சிவப்பு கார்டுகளாக மாற்றித் தர வேண்டும் என்றனர். சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்றதும், முதல் வேலையாக தகுதி வாய்ந்தவர்களுக்கு சிவப்பு கார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X