சென்னை : தேர்தல் பணிக்கு என்.சி.சி., மாணவர்கள் செல்வதற்கு, திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிக்கு வரும்போது, அவர்களுக்கு உதவும் வகையில், மாணவர்களை பயன்படுத்த தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது. அதாவது, என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாணவர்களை, தன்னார்வப் பணியில் நியமிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை உத்தரவை காட்டி, என்.சி.சி., மாணவர்களை தேர்தல் பணிக்கு அனுப்புவது, பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:என்.சி.சி., மாணவர்களை தேர்தல் தன்னார்வ பணிக்கு நியமிக்க வேண்டாம் என, 2019 பார்லிமென்ட் தேர்தலின் போது, மத்திய பாதுகாப்பு துறை சார்பில், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நாளில், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டாலோ, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ, அதை சமாளிக்கும் பக்குவம், சிறிய வயது மாணவர்களுக்கு இல்லை என, அதில் காரணம் கூறப்பட்டுள்ளது. எனவே, என்.சி.சி., மாணவர்களை தன்னார்வப் பணிக்கு நியமிப்பதை நிறுத்தியுள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE