புதுச்சேரி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானவர்களுடன் காங்., வேட்பாளர் வைத்தியநாதன் கலந்து கொண்டார்.லாஸ்பேட்டை காங்., வேட்பாளர் வைத்தியநாதனுன் மற்றும் கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன், தி.மு.க.,- இந்திய கம்யூ.,- வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நேற்று தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அப்போது, வேட்பாளர் வைத்தியநாதன் கூறுகையில், லாஸ்பேட்டையில் உள்ள உழவர்சந்தையில் பொது கழிப்பிடம் கட்டப்படும். குமரன் நகர், குறிஞ்சி நகரில் சாலைகள் அனைத்தும் வெற்றி பெற்ற 6 மாத காலத்திற்குள் சரி செய்யப்படும்.குறிஞ்சி நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை சரி செய்யப்படும். தொகுதி முழுதும் பல இடங்களில் எரியாத மின் விளக்குகள் அனைத்தும் பழுது நீக்கப்பட்டு சரி செய்யப்படும். மக்களோடு மக்களாக இருப்பேன். எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம், என்றார்.பின் காங்., - தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, ஏ.எப்.டி., திடலில் நேற்று மாலை நடந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் லாஸ்பேட்டை தொகுதி காங்., மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் மற்றும் வைத்தியநாதன் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE