புதுச்சேரி போலீசாருக்கு சம்பள உயர்வு என்.ஆர்.காங்., ஆறுமுகம் உத்தரவாதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி போலீசாருக்கு சம்பள உயர்வு என்.ஆர்.காங்., ஆறுமுகம் உத்தரவாதம்

Added : ஏப் 03, 2021
Share
புதுச்சேரி: டில்லி போலீசாருக்கு இணையான சம்பளத்தை புதுச்சேரி போலீசாருக்கு பெற்றுத் தருவேன் என என்.ஆர்.காங்., வேட்பாளர் ஆறுமுகம் கூறினார்.இந்திரா நகர் தொகுதி திலாஸ்பேட்டை தேரோடும் வீதி, மாரியம்மன் கோவில் வீதி மற்றும் நடுத் தெருவில் நேற்று கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்.,வேட்பாளர் ஆறுமுகம் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசிய

புதுச்சேரி: டில்லி போலீசாருக்கு இணையான சம்பளத்தை புதுச்சேரி போலீசாருக்கு பெற்றுத் தருவேன் என என்.ஆர்.காங்., வேட்பாளர் ஆறுமுகம் கூறினார்.இந்திரா நகர் தொகுதி திலாஸ்பேட்டை தேரோடும் வீதி, மாரியம்மன் கோவில் வீதி மற்றும் நடுத் தெருவில் நேற்று கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்.,வேட்பாளர் ஆறுமுகம் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசிய தாவது:இந்திரா நகர் தொகுதியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவித் தொகையை அதிகரித்து வழங்க முயற்சி செய்வேன். தொகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும். கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் சேதமடைந்த வீடுகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து கூடுதல் குடியிருப்புகள் கட்டித் தர முயற்சி செய்வேன்.இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் டில்லி போலீசாருக்கு இணை யாக புதுச்சேரி போலீசாரின் சம்பளத்தை உயர்த்தி வழங்க, முதல்வராக பொறுப்பேற்க உள்ள ரங்கசாமியின் முயற்சியுடன், மத்திய பா.ஜ., அரசிடம் இருந்து பெற்றுத் தருவேன்.போலீசார் குடியிருப்புக்கு அருகிலேயே அனைத்து நவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனை, கொண்டு வருவேன். பணியில் இறந்த போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணியை உடனே வழங்கவும், போலீஸ் துறையில் வழங்காமல் உள்ள பதவி உயர்வுகளை உடன் வழங்க முயற்சி செய்வேன் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X