பொது செய்தி

இந்தியா

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவேன் என்.ஆர்.காங்., பன்னீர்செல்வம் வாக்குறுதி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி: பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவேன் என உழவர்கரை தொகுதி என்.ஆர். காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் கூறினார்.உழவர்கரை தொகுதி என்ஆர்.காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று டீச்சர்ஸ் காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ஆதிகேசவன் நகர், பாவேந்தர் நகர், திருமலை தாயார் நகர் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர்

புதுச்சேரி: பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவேன் என உழவர்கரை தொகுதி என்.ஆர். காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் கூறினார்.உழவர்கரை தொகுதி என்ஆர்.காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று டீச்சர்ஸ் காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ஆதிகேசவன் நகர், பாவேந்தர் நகர், திருமலை தாயார் நகர் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:கடந்த காங், அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கவர்னரை குறைகூறியே காலத்தை கழித்து விட்டனர். கடைசி வரை மக்கள் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்தனர். ஆனால், முதல்வராக ரங்கசாமி இருந்த போது, மக்கள் எதிர்பார்க்காத அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினார்.நான் வெற்றி பெற்ற பிறகு, எனது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்றி தருவேன். இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தருவேன். பூமிக்கு கீழ் மின் ஒயர் கொண்டு வருவேன்.தொகுதியில் மழை நீர் தேங்காத வகையில், பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவேன். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க வழி செய்வேன்.பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அவர்களின் வேலையை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொகுதி மக்களுக்கு, அரசு வேலை வாய்ப்புக்கள் பெற்றுத் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X