பொது செய்தி

தமிழ்நாடு

மின் தடையில் 'பட்டுவாடா?'

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
சென்னை : மின் தடையின்போது, பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வருவதால், மின் தடை ஏற்பட்டால் துரிதகதியில் நடவடிக்கை எடுக்கும் வகையில், ஓட்டுப்பதிவு முடியும் வரை, துணை மின் நிலையங்களில், இரவு பணியில் இருக்குமாறு, செயற்பொறியாளர் களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மின் வாரியம், மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, 400 கிலோ வோல்ட், 230, 110, 33/11 கிலோ வோல்ட்

சென்னை : மின் தடையின்போது, பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வருவதால், மின் தடை ஏற்பட்டால் துரிதகதியில் நடவடிக்கை எடுக்கும் வகையில், ஓட்டுப்பதிவு முடியும் வரை, துணை மின் நிலையங்களில், இரவு பணியில் இருக்குமாறு, செயற்பொறியாளர் களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக மின் வாரியம், மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, 400 கிலோ வோல்ட், 230, 110, 33/11 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்களுக்கு எடுத்து வந்து, அதன் உயரழுத்தத்தை குறைத்து, மின் சாதனங்கள் உதவியுடன், சீராக வினியோகம் செய்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால், மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக திறன் உடைய துணைமின் நிலையங்களில் உள்ள சாதனங்களில், கடும் வெப்பம் காரணமாக பழுது ஏற்படுவதால், மின்சாரம் செல்வது தடைபடுகிறது.

இதனால், மின் தடை ஏற்படுகிறது. நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், மின் தடையை பயன்படுத்தி, அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுகின்றன. அதிக திறன் உடைய துணைமின் நிலையங்கள், தலா, ஒரு செயற்பொறியாளரின் கீழ், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், ஊழியர்களுடன் செயல்படுகின்றன.அவற்றில், 24 மணி நேரமும் ஆட்கள் இருந்து, கண்காணிப்பர். பெரும்பாலும், முதல் நிலை அதிகாரி களான செயற்பொறியாளர்கள், இரவு பணியில் இருப்பதில்லை.

இந்நிலையில், இரவில் மின் தடை ஏற்பட்டால், அதன் மீது துரிதகதியில் நடவடிக்கை எடுக்க, ஓட்டுப்பதிவு முடியும் வரை, இரவு பணியில் இருக்குமாறு, செயற்பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்திஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X