சென்னை : பரஸ்பர நிதி திட்ட மோசடி குறித்த வழக்கை விசாரிக்க, நிபுணத்து வம் பெற்றவர்களை, பொருளாதார குற்றப்பிரிவில் ஈடுபடுத்துவது குறித்து, தலைமை செயலர் அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'பிராங்கிளின் டெம்பிள்டன் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதி திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் முதலீட்டை திரட்டியது.புகார்கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி, முதலீட்டாளர்களுக்கு முன்கூட்டி தகவல் தெரிவிக்காமல், ஆறு பரஸ்பர நிதி திட்டங்களை நிறுத்தி விட்டது. இந்த மோசடியால், 3.15 லட்சம் முதலீட்டாளர்களுக்கு, 28 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்த நிறுவனத்துக்கு எதிராக, கோவையைச் சேர்ந்த பிரேம்நாத் சங்கர் என்பவர், புகார் அளித்தார்.இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். முடக்கம்இவ்வழக்கு விசாரணையை, உயர் நீதிமன்றம் கண்காணிக்க கோரி, பிரேம்நாத் சங்கர் தாக்கல் செய்த மனு:ஆறு திட்டங்களை நிறுத்திய பின், 3,549 கோடி ரூபாயை வேறு கணக்கிற்கு மாற்றிவிட்டனர். இந்தப் பணத்தை முடக்க, போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.
முதலீட்டாளர்கள் நலன் காக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்.விசாரணைபொருளாதார குற்றப்பிரிவு துவங்கியது முதல், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என, அறிக்கை அளிக்க வேண்டும்.இழந்த பணத்தை மீட்க, பொருளாதார குற்றப்பிரிவு எடுத்த நடவடிக்கையை, அறிக்கை யாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை.
சந்தை நிலவரம், பொருளாதார நிலவரம் நன்கு அறிந்தவர்களால் தான், திறமையாக விசாரிக்க முடியும்' என்றார்.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:ஆறு நிதி திட்டங்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்களின் தொடர்பை விசாரிக்க வேண்டும். மாநில பொருளாதார குற்றப்பிரிவில், தகுந்த நபர்கள் இருக்க வேண்டும். தற்போது, இந்த வழக்கில், 'செபி'யையும், அமலாக்கப் பிரிவையும் சேர்க்கிறோம்.தள்ளிவைப்புமாநில பொருளாதார குற்றப்பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்களை தேர்வு செய்வது அல்லது ஆலோசகர்களை ஈடுபடுத்துவது குறித்து, தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலர் அறிக்கை அளிக்க வேண்டும்.விசாரணை, ஜூன், 7க்கு தள்ளி வைக்கப் படுகிறது.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE