கொரோனா தொற்று பரவல் போக்கு தீவிர கண்காணிப்பு!

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, அரசு முடிவு செய்துள்ளது. தேவைக்கேற்ப கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று, அரசின் தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.தமிழகம் உட்பட, 11 மாநிலங்களில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா தலைமையில்,
கொரோனா பரவல், தலைமை செயலர், ராஜீவ் ரஞ்சன், தமிழகம்,

சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, அரசு முடிவு செய்துள்ளது. தேவைக்கேற்ப கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று, அரசின் தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.

தமிழகம் உட்பட, 11 மாநிலங்களில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா தலைமையில், நேற்று முன்தினம் விரிவான ஆய்வுக் கூட்டம் நடந்தது.தமிழக அரசு சார்பில், தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், வருவாய் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சரவை செயலர் பேசுகையில், 'கொரோனா மீண்டும் அதிகரிப்பது, நாட்டின் முக்கிய பிரச்னையாக உள்ளது. சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும், நோய் தொற்று உறுதியாவது கவலை அளிக்கிறது. 'நிலையான வழிகாட்டு முறைகளை கடைப்பிடிக்காமல், மெத்தனமாக இருப்பது, தொற்று அதிகரிக்க வழிவகை செய்யும். ஊரடங்கு இல்லாத நிலையில், இத்தொற்றை தடுப்பது சவாலானது. 'தொற்று அதிகரிக்கும் விகிதம், கடந்த ஆண்டை விட, அதிகமாக உள்ளது' என்றார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் விடுத்துள்ள அறிக்கை:

* மத்திய அரசின் அறிவுறையின்படி, கொரோனா பரிசோதனை, தினசரி, 50 ஆயிரத்தில் இருந்து, 85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது

* தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்போர் மற்றும் தொடர்பில் உள்ளவர்கள், உடனுக்குடன் கண்டறியப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தொற்று இருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதுடன், மேலும் பரவாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

* மூன்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால், அந்தப் பகுதி, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வரை, 846 பகுதிகள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன

* அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, தேவைக்கு அதிகமான படுக்கை வசதிகள், பிராண வாயு கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

* கொரோனாவை தடுக்க, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, அனைவரும் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. மார்ச், 16 முதல், நேற்று முன்தினம் வரை, 2.58 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

* தகுதி உடையவர்கள் அனைவரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நேற்று முன் தினம் வரை, 31.75 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று, 54.78 லட்சம் தடுப்பூசிகள், மத்திய அரசிடமிருந்த பெறப்பட்டுள்ளன.

* கொரோனாவால் ஏற்படும் மரணங்களை குறைக்க, அரசு வெளியிட்டுள்ள, நிலையான சிகிச்சை முறைகளை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும்

* அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரம் இயங்குகிறது. பொது மக்கள் தகவல் பெற, குறைகள் தெரிவிக்க, '104' என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

* நோய் தொற்று, தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கட்டுப் பாடுகள் தீவிரப்படுத்தப்படும்

* மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கொரோனா நோய் பரவாமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுத்து வருகிறது. பொது மக்கள் முகக்கவசம் அணிந்தும், தனி மனித இடைவெளி கடைபிடித்தும், முறையாக கைகளை கழுவியும், தொற்றை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


கனிமொழி எம்.பி.,க்கு கொரோனா பாதிப்பு

தி.மு.க., மகளிர் அணி செயலரும், எம்.பி.,யுமான கனிமொழி, 53, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும், தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். கொரோனா அறிகுறி தென்பட்டதால், அவருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில், தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை, சி.ஐ.டி., காலனியில் உள்ள, அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்பின், டாக்டர்கள் ஆலோசனைப்படி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில், நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, பாதிப்புகள் அல்லாத, முதல்நிலை தொற்று இருப்பதால், டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து, விரைவில் வீடு திரும்புவார் எனவும், டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nithya - Chennai,இந்தியா
04-ஏப்-202121:24:21 IST Report Abuse
Nithya Ungal jambamthai podhu makkal kittathan kaamippinga
Rate this:
Cancel
04-ஏப்-202117:28:12 IST Report Abuse
ஆப்பு போறும் போறும். நீங்க பாத்துக்குட்டது. இதோ பெரியவர் தேர்தல் பரப்புரையை முடிச்சுட்டு, கொரோனா கான்ஃபரன்சில் இறங்கிட்டாரு. முடக்கு அறிவிப்பெல்லாம் அவர்தான் அறிவிப்பாரு.
Rate this:
Cancel
Truth Behind - Tamilnadu  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-202115:49:57 IST Report Abuse
Truth Behind Last year Government was very strict at this time because of that only at least we are able to manage this one year. If the Government not controlled like that then think of the situation now.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X