வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவா நேற்று பாப்பாஞ்சாவடி பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.காங்., - கம்யூ., - வி.சி., கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரு டன் நேற்று காலை பாப்பாஞ்சாவடி மற்றும் சுற்றியுள்ள புதிய நகர் பகுதிகளில் வீடு வீடாக ஓட்டு சேகரித்து அவர் பேசுகையில், பாப்பாஞ்சாவடி அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். இந்த பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் தரமான சாலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், எல்.ஈ.டி வசதியுடைய தெரு மின்விளக்கு வசதிகளை செய்து கொடுப்பேன்.இப்பகுதி மக்கள் குறைகளை கேட்டு உடன் நிவர்த்தி செய்யும் வகையில் கொம்பாக்கத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் அமைப்பேன், என்றார்.வட்டார காங்., தலைவர் அய்யூப், மாநில பொது செயலாளர் ராஜ்குமார், தொகுதி செயலா ளர் பாண்டியன், இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் அந்தோணி, ஜீவானந்தம், பெஞ்சமின், தி.மு.க., தொகுதி செயலாளர் ராமசாமி, மதி, சண்முகம், தொகுதி இளைஞரணி மணிகண்டன், கதிரவன், திரவியராஜ், கணேஷ் கார்த்திக், அலெக்சாண்டர், நாகராஜ், கிருஷ்ணராஜ், நாகப்பன், வி.சி. முருகன், கதிர்வேல், வழக்கறிஞர் வீரசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE