புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் 191 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் 1,302 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 140, காரைக்காலில் 44; ஏனாமில் ஒருவர், மாகியில் 6 பேர் உட்பட 191 பேருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட் டுள்ளது.மாநிலத்தின் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்து 132 ஆனது. 363 பேர் மருத்துவமனையிலும், 1111 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் புதுச்சேரியில் 89 பேர், காரைக்காலில் 43, மாகியில் 2, ஏனாமில் 3 பேர் உட்பட 137 பேர் வீடு திரும்பினர். இதுவரை 39 ஆயிரத்து 974 பேர் வீடு திரும்பினர். நேற்று முன்தினம் உயிரிழப்பு இல்லை. மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 684 ஆனது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 142 சுகாதார ஊழியர்கள், 120 முன் கள பணியாளர்கள், 577 பொது மக்கள் உட்பட 75 ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இது வரை 6 லட்சத்து 78 ஆயிரத்து 772 பேருக்கு நடத்திய பரிசோதனையில், 6 லட்சத்து 26 ஆயிரத்து 27 பேருக்கு தொற்று இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE