பொது செய்தி

இந்தியா

வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் இலவச கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன் துவங்கி வைத்தார்.அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன் குத்துவிளக்கேற்றி சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசுகையில், கொரோனா நோய்க்கு நமது

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் இலவச கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன் துவங்கி வைத்தார்.அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன் குத்துவிளக்கேற்றி சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசுகையில், கொரோனா நோய்க்கு நமது நாட்டில் கண்டு பிடித்த மருந்து உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொற்று அதிகரிக்காமல் மக்களை பாதுகாத்த டாக்டர்கள் மற்றும் செவிலியர் கள் கொண்ட குழுவினருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். தற்போது கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், என்றார்.சுகாதார துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார், வெங்கடேஸ்வரா கல்வி குழும முதன்மை இயக்க அலுவலர் வித்யா, மருத்துவ கல்லுாரி இயக்குனர் மகாதேவன், கல்லுாரி டீன் ரத்தினசாமி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ், துணை முதல்வர்கள் முத்துகுமரவல் மற்றும் மங்கையர்கரசி உட்பட பலர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை துணை பொது மேலாளர் புகழேந்தி, சிறப்பு அதிகாரி ரமேஷ், நிர்வாக அதிகாரி ஜேம்ஸ், டாக்டர்கள் நிஷ்ஷாந்த் மற்றும் பிரபு ஆகியோர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X