ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சிக்குள் நடந்த மோதலில், அதிர்ஷ்டவசமாக, முதல்வர் பதவி இ.பி.எஸ்., வசம் வந்தது. ஒரு வாரம் தாங்க மாட்டார்; ஒரு மாதம் தாங்க மாட்டார் என, எதிர்க்கட்சிகள் ஆரூடம் கூற, அனைத்தையும் தவிடு பொடியாக்கி, பல தடைகளை கடந்து, நான்கு ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார். மீண்டும் முதல்வராக, கட்சியினரை ஒருங்கிணைத்து, தேர்தல் களத்தில், பம்பரமாக சுழன்று வருகிறார்.
எதிர்க்கட்சியினரே மூக்கில் விரல் வைத்து பார்க்கும் வகையில், பிரசாரம் செய்து வரும் முதல்வர் இ.பி.எஸ்., நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: தி.மு.க., - எம்.பி., ராசாவின் பேச்சு, கண்கலங்க வைக்கும் அளவுக்கு, உங்கள் மனதை ஆழமாக காயப்படுத்தி விட்டதா? நான், 40 ஆண்டுகளாக, அரசியலில் இருக்கிறேன். எத்தனையோ ஏச்சுகளையும், பேச்சுகளையும் தாங்கி தாங்கி, என் மனம் கடினப்பட்டிருக்கிறது. பொது வாழ்வு என்று வந்து விட்டால், இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்பது, நான் அடைந்திருக்கும் மனப்பக்குவம்.
ஆனால், ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், லோக்சபா உறுப்பினர், வயதில் பல ஆண்டுகள் இளையவர். பொது வெளியில், பெண் இனத்தையே அவமதிக்கும் வகையிலும், ஒரு முதல்வரை பார்த்து, இப்படி பேசலாமா என்ற, அடிப்படை நாகரிகம் இல்லாமல் பேசியது, என்னை கண் கலங்க வைத்து விட்டது. எதையும் தாங்கும் இதயம், இதையும் தாங்கும். அதைப் பற்றி இதற்கு மேல் பேச வேண்டாம் என்று, நினைக்கிறேன். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை, 'காப்பி' அடித்து விட்டதாக, ஸ்டாலின் தெரிவித்து வருகிறாரே? இதுபற்றி ஏற்கனவே சொல்லி விட்டேன். அவர்கள் தான், எங்களது தேர்தல் அறிக்கையை, காப்பி அடித்துள்ளனர்.முதல்வர் இ.பி.எஸ்.,சின் விரிவான பேட்டி, 'தேர்தல் களம்' இணைப்பில்...
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE