சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பெண்களுக்குகுறிக்கோள்அவசியம்!@

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 03, 2021
Share
Advertisement
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்து கூறும், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர், சரண்யா ஜெய்குமார்:நம் நாட்டின் மக்கள் தொகையில், 52 சதவீதம் ஆண்களும், 48 சதவீதம் பெண்களும் உள்ளனர். 48 சதவீதமாக உள்ள பெண் சக்தியை, நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். இதற்கு காரணம், பெண்களுக்கான கல்வி, சரிசமமாக
சொல்கிறார்கள்

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்து கூறும், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர், சரண்யா ஜெய்குமார்:
நம் நாட்டின் மக்கள் தொகையில், 52 சதவீதம் ஆண்களும், 48 சதவீதம் பெண்களும் உள்ளனர். 48 சதவீதமாக உள்ள பெண் சக்தியை, நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். இதற்கு காரணம், பெண்களுக்கான கல்வி, சரிசமமாக கிடைக்கவில்லை. மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில், பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் முன்னேற்றம், ஆண்களுக்கு சமமாக உள்ளது.

நம் நாட்டில், 48 சதவீதமாக உள்ள பெண்களின் சக்தியை நாம் சரியாக பயன்படுத்தி இருந்திருந்தால், எங்கோ சென்றிருப்போம்; பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்திருப்போம். பெண் குழந்தையாக பிறப்பதே ஒரு வரம் தான். சலவைத் தொழில் செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்தவள் நான். இன்னமும் எங்கள் உறவினர்கள் பலர், அந்தத் தொழிலை விடாமல் செய்து வருகின்றனர்.

நான் என் முயற்சியாலும், என் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தாலும் நன்றாக படித்து, தென் மாநிலங்களில், எங்கள் சமுதாயத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்ணாகத் திகழ்கிறேன்.பள்ளிக்கூடத்திற்கு சென்று கல்வியை மட்டுமின்றி, வாழ்க்கையையும் நாம்கற்றுக் கொள்கிறோம். அந்த வாய்ப்பு, நம் பெண்களுக்கு சரிசமமாக கிடைக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

சில சமயங்களில் வேலைக்கு போகாமலேயே பெண்களுக்கு திருமணம் ஆகி, குழந்தையும் பிறந்து விடுகிறது. அந்தச் சூழ்நிலையில், அதிர்ஷ்டவசமாக ஒரு வேலைவாய்ப்பு உங்களை வந்து சேரும். அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.அந்த நேரத்தில், உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தையைப் பார்த்துக் கொள்கிறோம் என்றால், அவர்களைப் போற்றிப் பாராட்ட வேண்டும்.

அவர்களுடன் உங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அடிக்கடி பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள்.இப்படி இருந்தால், தேவையற்ற வாக்குவாதங்கள்,
சண்டைகள் குடும்பத்தில் வராது; குடும்பத்தில் பாசம் வளரும். பெண்களுக்கு உயர்ந்த
குறிக்கோள் அவசியம். குறிக்கோள் என்பது பெட்ரோல் மாதிரி. ஓடும் வண்டியில் பெட்ரோல் இல்லை என்றால் நின்று விடும்.எனவே, வண்டி என்ற வாழ்க்கை சிறப்பாக ஓட, குறிக்கோள் எனும் பெட்ரோல் அவசியம். அவ்வப்போது பெட்ரோல் ஊற்றி வண்டியை இயக்குவது போல, வாழ்க்கைக்கும் குறிக்கோள் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.

எனவே, பெண்கள் அனைவரும் கல்வி கற்பதுடன், நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடி,
குறிக்கோளை நிர்ணயித்து, அதை நிறைவேற்ற, கடுமையாக பாடுபடுங்கள்!


கால் இல்லை; தன்னம்பிக்கை அதிகம் உண்டு!ஒரு கால் இல்லாத நிலையிலும், ஓட்டப் பந்தயங்களில் ஓடி, பதக்கங்களை குவித்து வருவது பற்றி, 26 வயது இளைஞர் சோலைராஜ்: சொந்த ஊர், வேலுார் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உள்ள, கே.வி.குப்பம். அப்பா, ராணுவத்தில் இருந்தவர். அம்மா மற்றும் இரு மூத்த சகோதரிகள் உண்டு. ராணுவத்தில் அதிகாரியாக சேர வேண்டும் என்பதற்காக, 2012ல், கிழக்கு தாம்பரத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருந்தேன்.

கல்லுாரியில் வகுப்புகள் துவங்குவதற்கு முதல் நாள், நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்றேன். வளைவு ஒன்றில் திரும்பும் போது, எதிரே வந்த கார் மோதியதில், காலில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்து விட்டோம்.நண்பர் லேசான காயங்களுடன் தப்பி விட்டார். நீண்ட நேரம் அங்கேயே கிடந்ததால், அபாய நிலையை அடைந்து விட்டேன். மருத்துவமனையில் பல நாட்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றும் என் காலை காப்பாற்ற முடியவில்லை.என் இடது காலை எடுத்தால் தான், உயிரை காப்பாற்ற முடியும் என, டாக்டர்கள் கூறி, ஒரு நாள் காலை எடுத்தும் விட்டனர். உணர்வு வந்த போது, கால் இல்லாமல் எப்படி செயல்பட முடியும் என்ற அதிர்ச்சியில், தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.

டாக்டர்களும், பெற்றோரும் என்னை தேற்றினர். செயற்கைக் கால் இருப்பதை அறிவுறுத்தினர். முதலில் பொருத்திய செயற்கைக் காலை பயன்படுத்தி, நடக்கவே மிகுந்த சிரமப்பட்டேன்.பின், 2013ல், சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு, செயற்கை கால் பொருத்தும் மையத்தில், 2 லட்ச ரூபாய் செலவில், செயற்கை கால் பொருத்திக் கொண்டேன். அதன் பிறகு, இயல்பாக, சற்று சிரமத்துடன் நடக்க முடிந்தது.கால்கள் இருந்த போது வராத ஆர்வம், ஒரு கால் போன பிறகு, விளையாட்டில் ஏற்பட்டது.

செயற்கை கால் உதவியுடன் ஓடுவதற்கான பயிற்சியை, ஐதராபாதில் தருகின்றனர் என்பதை அறிந்து அங்கு சென்ற போது, பயிற்சியாளர் வீரமணியை சந்தித்தேன்.அவர் என் மீது இரக்கம் கொண்டு, எனக்கு தீவிரமாக பயிற்சி அளித்து, போட்டிகளில் பங்கேற்கச் செய்தார். வருமானமே இல்லாத நிலையில், அவரே எனக்கு உணவு, உறைவிடம் வழங்கி, என்னை போட்டிகளில் பங்கேற்கச் செய்தார்.அவர் கொடுத்த உற்சாகத்தால், இப்போது, கால் இல்லாமல் செயற்கை கால்களுடன் ஓடும் பல தடகள போட்டிகளில் பங்கேற்கிறேன். வெண்கலம், தங்கப் பதக்கங்கள் பலவற்றை வாங்கியுள்ளேன். உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தர வேண்டும்; அதை என் ஓட்டத்தால் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்; வெற்றி பெற்றே தீருவேன்!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X