மகப்பேறு மருத்துவமனை கொண்டு வருவேன் என்.ஆர்.காங்., வேட்பாளர் சுகுமாறன் வாக்குறுதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மகப்பேறு மருத்துவமனை கொண்டு வருவேன் என்.ஆர்.காங்., வேட்பாளர் சுகுமாறன் வாக்குறுதி

Added : ஏப் 03, 2021
Share
வில்லியனுார்: வில்லியனுார் என்.ஆர்.காங்., வேட்பாளர் சுகுமாறன் நேற்று காலை ஆத்துவாய்க்கால்பேட் பகுதியிலும், இரவு சுல்தான்பேட்டை பள்ளி வாசல் வீதி, அல்அமீன் வீதி, முகமதிய நகர், அரசூர் வீதி உள்ளிட்ட பகுதியில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:சுல்தால்பேட்டை பகுதி யிலேயே மகப்பேறு மருத்துவமனை கொண்டு வருவேன். இருதநோய், நீரிழிவுநோய் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளை

வில்லியனுார்: வில்லியனுார் என்.ஆர்.காங்., வேட்பாளர் சுகுமாறன் நேற்று காலை ஆத்துவாய்க்கால்பேட் பகுதியிலும், இரவு சுல்தான்பேட்டை பள்ளி வாசல் வீதி, அல்அமீன் வீதி, முகமதிய நகர், அரசூர் வீதி உள்ளிட்ட பகுதியில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:சுல்தால்பேட்டை பகுதி யிலேயே மகப்பேறு மருத்துவமனை கொண்டு வருவேன். இருதநோய், நீரிழிவுநோய் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளை கொண்ட 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட நடவடிக்கை எடுப்பேன். மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பாட பிரிவுகளுடன் விளையாட்டு திடலும், உருது பாட பிரிவுடன் அரசு மகளிர் கல்லுாரியும் கொண்டு வருவேன். பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க அனைத்து வீதிகளையும் இணைத்து சி.சி.டி.வி., கேமரா பொருத்துவேன்.சுல்தான்பேட்டை மற்றும் புதிய நகர் பகுதிகளுக்கு கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் தரமான சிமெண்ட் சாலையும், சுத்திகரிக்கப்பட்ட நல்ல குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சுல்தான்பேட்டையில் நவீன வசதிகளுடன் கூடிய பல்நோக்கு சமுதாய கூடம் அமைத்து கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் முன்னாள் சேர்மன் ராஜேஷ், செந்தில், பா.ம.க., முகமது யூனுஸ், மதியழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X