அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் அரசியல் வியாபாரி ; அன்புமணி ஆவேசம்

Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
அச்சிறுப்பாக்கம் : ''அரசியல் வியாபாரியான ஸ்டாலினை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்; விவசாயியான, தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,சின் ஆட்சியை மீண்டும் தொடர செய்ய வேண்டும்,'' என, பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் - தனி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, பா.ம.க.,
 ஸ்டாலின் அரசியல் வியாபாரி ; அன்புமணி ஆவேசம்

அச்சிறுப்பாக்கம் : ''அரசியல் வியாபாரியான ஸ்டாலினை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்; விவசாயியான, தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,சின் ஆட்சியை மீண்டும் தொடர செய்ய வேண்டும்,'' என, பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் - தனி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி, நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது, அவர் பேசியதாவது:கடந்த, 70 ஆண்டுகளுக்கு பின், ஒரு விவசாயியான இ.பி.எஸ்., தமிழக முதல்வராக வந்துள்ளார். அவர் மீண்டும் முதல்வராக வர வேண்டும். அ.தி.மு.க., கூட்டணியில் ஒரு விவசாயி, முதல்வர் வேட்பாளராக உள்ளார்.தி.மு.க., கூட்டணியில், அரசியல் வியாபாரி, முதல்வர் வேட்பாளராக உள்ளார்.

ஸ்டாலின் அரசியல் வியாபாரி. ஸ்டாலினுக்கு முதல்வராக எந்த தகுதியும் கிடையாது. அவரை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.வன்னியர்களின், 40 ஆண்டு போராட்டத்திற்கு செவி சாய்த்து, 10.5 சதவீத இடஒதுக்கீட்டை, முதல்வர் இ.பி.எஸ்., அளித்துள்ளார். வன்னியர்களுக்கு மட்டுமன்றி, இதுபோலவே சமூகத்தில் பின் தங்கியிருக்கும் அனைத்து பிரிவினருக்கும், இட ஒதுக்கீடு அவசியம். தி.மு.க., பெண்மை மற்றும் தாய்மையை மதிக்க தெரியாத கட்சி. அதற்கு உதாரணம்தான், சில தினங்களுக்கு முன், தி.மு.க.,வின் கொள்கைப் பரப்பு செயலர் ராசா, முதல்வரின் தாயைப் பற்றி கொச்சையாக பேசியது.பெண்களுக்கு பல்வேறு வகையில் முன்னேற்றம் தரும், அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்.இவ்வாறு, அன்புமணி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-ஏப்-202118:23:44 IST Report Abuse
Malick Raja மானம் போய் உயிர் காவலா ?ஒரே கேள்வி தான் இவருக்கு
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
04-ஏப்-202123:01:16 IST Report Abuse
bal அதே கொங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது சுகாதார அமைச்சராக இருந்தீங்க...காலாவதியான மருந்துகளை விற்க அனுமதி கொடுத்து மாட்டினது பற்றி உலகம் பேசவில்லையே...
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
04-ஏப்-202119:55:38 IST Report Abuse
Arasu யார் வாயிலிருந்து என்ன வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X