விழுப்புரம்: சட்டசபை தேர்தலையொட்டி, விழுப்புரம் தொகுதியில் பதற்ற ஓட்டுச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை திடீர் ஆய்வு செய்தார்.சட்டசபை தேர்தலையொட்டி, விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கோலியனுார் கூட்ரோட்டில் மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.அங்கு, கடலுார், புதுச்சேரி மற்றும் சென்னை மார்க்கங்கள் வழியாக சென்ற வாகனங்களை, போலீசார் நிறுத்தி, அதில் வாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள், பணம் ஏதும் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனையிட்டு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, வளவனுார் பேரூராட்சி பகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதிகளில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்போது எஸ்.பி., ராதாகிருஷ்ணன், டி.எஸ்.பி., நல்லசிவம் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE